Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 3 ஜூலை, 2021

இரண்டு திட்டங்களில் கூடுதல் டேட்டா நன்மையை வழங்கிய ஏர்டெல் நிறுவனம்.!

ஏர்டெல் நிறுவனம் ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டியாக பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. மேலும் இந்நிறுவனம் 5ஜி சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. எனவே விரைவில் ஏர்டெல் நிறுவனம் 5ஜி
சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஏர்டெல் நிறுவனம் கூடியவிரைவில் அதன் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் நன்மைகள் மற்றும் விலைகளை திருத்தப் போவதாக தகவல் வெளிவந்தது. தற்சமயம் அது உண்மையாகி உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

அதாவது ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.249 மற்றும் ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டங்கள் திருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ரூ.249 திட்டத்தின் மீது விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த புதிய திருத்தத்திற்கு பிறகு பயனர்கள் ஒரு பேமிலி மெம்பரை கூடுதல் இணைப்பாக அழைக்க முடியும். பின்பு இந்த திட்டம் இப்போது அதிக டேட்டா நன்மைகளுடன் வரும்.

ஏர்டெல் ரூ.999 திட்டத்தின் மீது விலை உயர்வு

மேலும் ஏர்டெல் ரூ.999 திட்டத்தின் மீது விலை உயர்வு அறிவிக்கப்படவில்லை. ஆனால் இந்த திட்டத்தின் நன்மைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த இரண்டு திட்டங்களின் புதிய நன்மைகள் பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.249 போஸ்ட்பெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.249 ஆட்-ஆன் போஸ்ட்பெய்ட் சிம் திட்டம் தற்போது ரூ.50 என்கிற விலை உயர்வை பெற்றுள்ளது. எனவே இனிமேல் இந்த திட்டத்தின் மாதாந்திர விலை ரூ.299-ஆக மாறியுள்ளது. விலை உயர்வுக்கு பிறகு இந்த திட்டத்தில் கூடுதல் டேட்டா நன்மையும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.249 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 10ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் தற்போது ரூ.299-ஆக விலை உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு 30ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் ரூ.999 பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.999 பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டத்தின் நன்மைகள் திருத்தப்பட்டுள்ளது. அதன்படி இந்த திட்டம் டேட்டா ரோல்ஓவர் வசதியுடன் 150ஜிபி மாதந்திர டேட்டா நன்மைகளை வழங்குகிறது.

மேலும் ஏர்டெல் ரூ.999 பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ், அமேசான் ப்ரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் போன்ற ஓடிடி நன்மைகளுக்கும்அணுகல் கிடைக்கும். குறிப்பாக இது ஒரு பேமிலி பிளான் என்பதால், பயனர்கள் இந்த திட்டத்துடன் 4 பேமிலி ஆட்ஆன் இணைப்புகளை பெறமுடிந்தது. ஆனால் தற்போது திருத்தத்திற்குப் பிறகு, பேமிலி ஆட் ஆன் இணைப்புகளின்எண்ணிக்கை 4-இல் இருந்து 3 ஆகக் குறையும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக வீட்டில் இருந்து வேலை செய்யும் பயனர்களுக்கு இந்த திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். மேலும் விரைவில் பல்வேறு புதிய திட்டங்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக