Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 29 ஜூலை, 2021

குருநாதா இங்கயும் வந்துட்டிங்களா?-ஆகஸ்ட் 3 அறிமுகமாகும் ரெட்மி புக்: ரெட்மியின் முதல் லேப்டாப் இதுதான்!

குருநாதா இங்கயும் வந்துட்டிங்களா?-ஆகஸ்ட் 3 அறிமுகமாகும் ரெட்மி புக்!

ரெட்மியின் முதல் லேப்டாப்பான ரெட்மி புக் ஆகஸ்ட் 3 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது சியோமி தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் முதல் ரெட்மி பிராண்டட் மடிக்கணினியை அறிமுகப்படுத்தவதாக நிறுவனம் தரப்பில் டீஸ் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு இந்தியாவில் மடிக்கணினி பிரிவில் நுழைந்த சியோமி மடிகணினி சந்தையில் தனது இருப்பை வலுப்படுத்த ரெட்மி தொடரில் லேப்டாப் அறிமுகப்படுத்த உள்ளது

சியோமி முன்னதாகவே சீனாவில் ரெட்மி புக், ரெட்மி புக் ஏர் மற்றும் ரெட்மி புக் ப்ரோ மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய ரெட்மி புக் லேப்டாப் ஆனது ஆகஸ்ட் 3 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என சியோமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் முதல் ரெட்மி பிராண்டட் மடிக்கணினி இதுவாகும்.

ரெட்மி நிறுவனம் கடந்தாண்டு முதல் பவர் பேங்க்ஸ், இயர்பட்ஸ் மற்றும் ஸ்மார்ட் பேண்ட் போன்ற பல்வேறு தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. இந்தாண்டு நிறுவனம் ஸ்மார்ட் டிவி பிரிவில் நுழைந்து தடம்பதித்து வருகிறது. ரெட்மி வெளியிட்டுள்ள ஊடக அழைப்புப்படி, நிறுவனம் தற்போது ரெட்மி புக் உடன் மடிக்கணினி சந்தையில் தடம் பதிக்க இருக்கிறது.

டீசரில் வெளியான புகைப்படத்தின்படி இது தடிமனான பெசல்களுடன் உன்னதமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. சீனாவில் ரெட்மி புக் மாதிரிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் இந்தியாவில் எந்த மாடல் சாதனம் அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து தெரியவில்லை. ரெட்மி புக் தொடர் முதன்முதலில் சீனாவில் 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. சீன சந்தையில் பல மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ரெட்மி புக் ப்ரோ 14 மற்றும் ரெட்மி புக் ப்ரோ 15 மடிக்கணினிகள் ஏஎண்டி ரைசன் மற்றும் 11-த் ஜென் இன்டெல் கோர் செயலியுடன் வருகிறது.

ரெட்மி புக் அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் சியோமி தனது எம்ஐ நோட்புக் தயாரிப்பு வரிசையை விரிவுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எம்ஐ நோட்புக் ப்ரோ 14 மற்றும் நோட்புக் அல்ட்ரா 15.6 மடிக்கணினிகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் சியோமி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ரெட்மி தொடர் என்பது இந்தியாவில் முன்னதாகவே நல்ல வரவேற்பு பெற்ற நிறுவனமாக இருக்கிறது. ஸ்மார்ட்போன்கள் பிரிவில் ரெட்மி தொடருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதையடுத்து நிறுவனம் அறிமுகம் செய்யும் ரெட்மி லேப்டாப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக