இந்திய
ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான லாவா தனது ப்ரோபட்ஸ் டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸை
அறிமுகம் செய்தது. பின் தற்போது நிறுவனம் தங்களது 5ஜி ஸ்மார்ட்போனை
நாட்டில் அறிமுகப்படுத்த உள்ளது. அதேபோல் நிறுவனம் இந்தாண்டு தனது முதல்
ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்தாண்டின் இரண்டாம்
பாதியில் நிறுவனம் பெரிய திட்டங்களை கொண்டிருக்கிறது என்றே கூறலாம்.முதல் 5ஜி சாதனங்கள்
லாவாவின் வரவிருக்கும் தயாரிப்புகள் மற்றும் அவற்றின் விரிவாக்கத் திட்டங்கள் குறித்து நிறுவனத்தின் தயாரிப்பு தலைவர் டிஜேந்தர் சிங் உடன் தொடர்பு கொண்டோம். நிறுவனம் தனது முதல் 5ஜி சாதனங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என குறிப்பிட்டார்.
புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்ய திட்டம்
தீபாவளி காலக்கட்டத்தில் தங்கள் முதல் 5ஜி ஸ்மார்ட்போனை புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகப்படுத்த உள்ளோம். இது தனித்துவமானது, வேறு எந்த சாதனத்திலும் பெற்றிடாத வகையில் இருக்கும் என குறிப்பிட்டார். சிறந்த அம்சங்களுடன் ஒரே ஒரு 5ஜி ஸ்மார்ட்போனை மட்டுமே நிறுவனம் அறிமுகப்படுத்தும் என அவர் நம்மிடம் தெரிவித்தார். மேலும் இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.17,000 முதல் ரூ.20,000 வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.
லாவா தலைவர் விளக்கம்
நிறுவனம் இந்திய தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களுடன் கலந்துரையாடி வருகிறது. காரணம் தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களின் சுற்றுச்சூழல் அமைப்பில் தங்கள் ஸ்மார்ட்போன் எவ்வாறு பொருந்தும் என லாவா தலைவர் விவரித்தார். 5ஜி ஸ்மார்ட்போனுக்கான தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களுடன் சோதனைகளை நடத்துவது குறித்து டிஜேந்தர் பதிலளித்தார்.
முதல் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்ய திட்டம்
தனது 5ஜி ஸ்மார்ட்போனை நாட்டில் அறிமுகம் செய்வது மட்டுமின்றி உள்நாட்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான லாவா தனது முதல் ஸ்மார்ட்வாட்சை தீபாவளி காலக்கட்டத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளார்.லத்தீன் அமெரிக்கா போன்ற புதிய நாடுகளுக்குள் நுழைய திட்டமிட்டிருப்பதால் நிறுவனம் தங்களை சில சந்தைகளில் மட்டும் கட்டுப்படுத்த விரும்பவில்லை என குறிப்பிட்டார்.
20-க்கும் மேற்பட்ட நாடுகளில் சேவை
நாடுகளுக்கான அணுகல் விரிவுப்படுத்தல் குறித்து பார்க்கையில், தாங்கள் தற்போது 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறோம் என குறிப்பிட்டார். இந்தநிலையில் தற்போது நாங்கள் சில தென்கிழக்கு ஆசிய நாடுகள், சில ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு செல்ல இருக்கிறோம் என குறிப்பிட்டார். இந்த நாடுகளில் உள்ள விநியோகஸ்தர்களுடன் நிறுவனம் கலந்துரையாடி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டுக்கான லாவா சந்தை பங்கு
இதற்கிடையில் நிறுவனத்தின் தயாரிப்பு தலைவர், 10 சதவீதம் வரை சந்தை பங்கை எதிர்பார்க்கிறார்கள் என குறிப்பிட்டார். அதேபோல் தொலைபேசியில் லாவாவுக்கு 20 சதவீதத்திற்கும் அதிகமான பங்கு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதையடுத்து விரைவில் லாவாவின் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக