
வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் தொடர்ந்து புதிய அம்சங்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் பயனாளர்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளமாட்டோம் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் முன்பு தனியுரிமை கொள்கைகளை ஏற்காவிட்டால் வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்படும் வசதிகள் படிப்படியாக குறைக்கப்படும் என கூறியது. பின்பு வாட்ஸ்அப் செயலி பயன்படுத்துவோரின் தகவல்களை திரட்டி அவற்றை பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வணிக நோக்கில் விற்பதும் புதிய கொள்கைகளில் ஒன்றாக கூறப்பட்டது.
குறிப்பாக இந்தியாவில் மட்டுமே அதிகளவு மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர். எனவே வாட்ஸ்அப் கொண்டுவந்த தனியுரிமை கொள்கைக்கு மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அதன்பின்பு சிலர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு டெலிகிராம், சிக்னல் உள்ளிட்ட பல்வேறு செயலிகளை பயன்படுத்த துவங்கிவிட்டனர்.
இந்த புதிய தனியுரிமை கொள்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது. அதேபோல் வாட்ஸ்அப் நிறுவனத்தின் தனியுரிமை கொள்கைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
மேலும் அண்மையில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின்போது பேஸ்புக் நிறுவனத்துடன் தகவல் பகிரப்படாது என்று வாட்ஸ்அப் நிறுவனம் உறுதியளித்தது. மேலும் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அம்சம் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது வாட்ஸ்அப் செயலியில் புகைப்படங்களை அனுப்பும் அம்சத்தில் மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் இன்னும் முழுமை பெறாத நிலையில், இந்த அம்சம் தற்போது முதற்கட்டமாக பீட்டா பதிப்பில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளதாககூறப்படுகிறது.
இந்த அம்சம் வாட்ஸ்அப் செயலியில் புகைப்படங்களை அனுப்பும் போது மூன்று ஆப்ஷன்களை வழங்கும் என்று கூறப்படுகிறது. அதாவது இதுவரை வாட்ஸ்அப் செயலியில் நாம் புகைப்படங்களை அனுப்பும்போது தரம் தானாக குறைக்கப்பட்டு விடும். ஆனால் இனிமேல் அந்த நிலை இருக்காது.
நீங்கள் Photo Upload Quality ஆப்ஷன்களை க்ளிக் செய்ததும், ஆட்டோ, பெஸ்ட் குவாலிட்டி, டேட்டா சேவர் என்ற மூன்றுதரங்களில் புகைப்படங்களை அனுப்ப முடியும். குறிப்பாக நீங்கள் ஆட்டோ(Auto) எனும் விருப்பத்தை தேர்வுசெய்தால், ஒவ்வொரு புகைப்படத்திற்கு சிறந்த தேர்வை வாட்ஸ்அப் கண்டறிந்து அனுப்பும். அடுத்து பெஸ்ட் குவாலிட்டி (Best Quality) என்பதை நீங்கள் தேர்வுசெய்தால், அதிக தரமுள்ள புகைப்படங்களை அனுப்ப முடியும். கடைசியாக டேட்டா சேவர் (data saver) எனும் விருப்பத்தை தேர்வு செய்தால் புகைப்படங்களின் அளவை குறைத்து வேகமாக அனுப்பும். ஆனால் இந்த டேட்டா சேவர் விருப்பத்தை தேர்வு செய்தால்உங்களின் புகைப்படத்தின் தரம் குறைந்தவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக