Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 30 ஜூலை, 2021

சேவை உன்னுடையது., சாதனம் என்னுடையது- ஜியோவுடன் இணைந்து ஒப்போ 5ஜி சோதனை!

 ஜியோவுடன் ஒப்போ 5ஜி ஆய்வு

5ஜி சோதனைகள் நாட்டில் தொடங்கப்பட்டுவிட்டன. இதில் அனைத்து தனியார் தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து சோதனையை தொடங்கி வருகின்றன. அதன்படி ரெனோ 6 தொடருக்காக ரிலையன்ஸ் ஜியோவுடன் 5ஜி சோதனைகளை நடத்தியதாக ஒப்போ தெரிவித்துள்ளது.

ஜியோவுடன் ஒப்போ 5ஜி ஆய்வு

ஒப்போ இந்தியா தனது 5ஜி ஆய்வகத்தில் ஜியோ வழங்கிய 5ஜி எஸ்ஏ நெட்வொர்க் சூழலில் ரெனோ 6 சீரிஸ்களுக்கான 5ஜி முழுமையான நெட்வொர்க் சோதனையை நடத்தியுள்ளது. ஒப்போ ரெனோ 6 சீரிஸ்களுக்கான சோதனை மிகவும் சாதகமான முடிவை அளித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

5ஜி நெட்வொர்க் மற்றும் இணைப்பு

இந்த சோதனைகள் முழுமையான தொழில்நுட்பம் (என்எஸ்ஏ) நெட்வொர்க்குகளில் நடத்தப்படுகின்றன. 5ஜி நெட்வொர்க் மற்றும் இணைப்பை ஆதரிக்க என்எஸ்ஏ தொழில்நுட்பம் 4ஜி உள்கட்டமைப்பை நம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ ரெனோ சாதனம் மூலம் சோதனை

ஒப்போ ரெனோ 6 13 5ஜி பேண்டுகளையும் ரெனோ 6 ப்ரோ 11 5ஜி பேண்டுகளையும் கொண்டுள்ளது. அதேபோல் 5ஜி சோதனைகளுக்காக டெலிகாம் ஆபரேட்டர்களுடன் ரியல்மி மற்றும் லாவா பேச்சுவார்த்தையில் இருக்கின்றனர். டெலிகாம் ஆபரேட்டர்களுடன் 5ஜி சோதனைகளை நடத்தும் ஒரே ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஒப்போ மட்டுமல்ல என்பது கவனிக்கத்தக்க ஒன்று. தங்களது நெட்வொர்க்களை சோதிப்பதற்கு பிற தயாரிப்பு நிறுவனங்களும் தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதேபோல் இந்த பேச்சுவார்த்தைகளானது ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ ஆகியவைகளுடன் சோதனைகளுக்கு விவாதிக்கப்பட்டு வருகிறது.

5ஜி நெட்வொர்க்குகள் கிடைத்தவுடன் சோதனை

5ஜி நெட்வொர்க்குகள் கிடைத்தவுடன் சோதனைகள் செய்யப்படலாம் என ரியல்மி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் உள்நாட்டு தயாரிப்பாளர்களான லாவா சமீபத்தில் கிஸ்பாட் தளத்திற்கு அளித்த பேட்டியில், தங்களது சாதனங்களுக்கான 5ஜி சோதனைக்கு தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினார். மேலும் தீபாவளி காலக்கட்டத்தில் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் உறுதியளித்தார்.

5ஜி சோதனை நடத்த அனுமதி

தொழில்நுட்பத்துறை மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட நான்கு பகுதிகளில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா மற்றும் எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு தொடக்கம் முதல் 5ஜி சோதனை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டிப்போட்டுக் கொண்டு 5ஜி சேவை

தொலை தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு 5ஜி சேவைகள் எனும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர். மும்பையில் ஏர்டெல் நிறுவனம் நோக்கியா நெட்வொர்க் கியரை பயன்படுத்தி 5ஜி சோதனை நடத்தியது. 5ஜி நெட்வொர்க் சோதனையானது மும்பையில் உள்ள லோயர் பரேல் பகுதியில் நடத்தப்பட்டது. லோயர் பரேல் பகுதியில் அமைந்துள்ள ஃபீனிக்ஸ் மாலின் நோக்கியா 5ஜி கியரை பயன்படுத்தி இந்த சோதனை நடத்தப்பட்டது.

ஏர்டெல் 5ஜி சோதனை

5ஜி சோதனையின் நிலையை பதிவு செய்வதற்கு ஏர்டெல் 5ஜி சோதனை ஸ்பீட் காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இதன்படி அல்ட்ரா லோ டென்டன்சியில் 1.2 ஜிபிபிஎஸ் பதிவிறக்க வேகமும், 850 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தையும் பதிவு செய்திருக்கிறது. ஹைதராபாத்தில் ஏர்டெல் நிறுவனம் தனியார் வணிக வலையமைப்பின் ஸ்டாண்ட் அல்லாத தனியாக நெட்வொர்க் மூலம் 5ஜி சேவையை வழங்கிய முதல் வழங்குனராக இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக