திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் முறப்பநாடு உள்ளது. ஊரின் வடக்குப் பக்கம் சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் திருக்கோயில் அமைந்து உள்ளது.
மாவட்டம் :
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், முறப்பநாடு, திருநெல்வேலி மாவட்டம்.
எப்படி செல்வது?
திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் பேருந்துகளில் சென்று முறப்பநாட்டில் இறங்கலாம். பேருந்து நிலையத்தில் இருந்து சிறிது தூரம் நடந்தால் கோயிலை அடையலாம்.
கோயில் சிறப்பு :
அகத்தியரின் சீடரான உரோமச மகரிஷிக்கு சுவாமி இத்தலத்தில் குருவாக காட்சி கொடுத்தார்.
இத்திருத்தலத்தில் சிவபெருமானே தட்சிணாமூர்த்தியாக, தென்முகக் கடவுளாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
நவகைலாயங்களில் முறப்பநாடு நடு கைலாயமாகும்.
இத்திருத்தலம் குருவுக்கான தலமாகும்.
பிருகண்ட முனிவர் பாதம் பட்ட இடமும், காஞ்சனமாலை மோட்சம் பெற்றதும், மார்க்கண்டேயன் பூஜை செய்ததும் இவ்விடமே ஆகும்.
இங்கு சுவாமிக்கு எதிரே உள்ள நந்தி குதிரை முகத்துடன் இருக்கிறது.
பைரவர் சன்னதியில் இரண்டு பைரவர்கள் இருக்கின்றனர். நாய் வாகனத்துடன் காட்சி தரும் பைரவர் கால பைரவர் என்றும், வாகனம் இன்றி காட்சி தரும் மற்றொரு பைரவர் வீர பைரவர் என்றும் அழைக்கின்றனர்.
இங்குள்ள கைலாச நாதர் குரு அம்சமாக இருப்பதால் சுவாமிக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி, கொண்டைக்கடலை நைவேத்தியம் செய்யப்படுகிறது.
காசியில் கங்கை நதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்கிறது. அதேபோல முறப்பநாட்டிலும் தாமிரபரணி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. எனவே இதை 'தெட்சிணகங்கை" என்கிறார்கள். இங்கு குளித்தால் கங்கையில் குளித்ததற்கு ஈடானது.
விநாயகர் சன்னதிக்கு முன்புறத்தில் துவாரபாலகர்கள் போல இரண்டு விநாயகர்கள் இருக்கிறார்கள். விநாயகரை இத்தகைய அமைப்பில் காண்பது அபூர்வம்.
கோயில் திருவிழா :
திருவாதிரை, சிவராத்திரி, பிரதோஷம், மாதபிறப்பு நாட்கள் மற்றும் குருப்பெயர்ச்சி ஆகிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
பிரார்த்தனை :
திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.
ஆசை குறைய வேண்டுமானாலும், கையிலே காசு தங்க வேண்டுமானாலும் இக்கோயிலில் வேண்டிக் கொள்ளலாம்.
நேர்த்திக்கடன் :
வேண்டுதல் நிறைவேறியவர்கள் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
அருள்தரும் ஆலயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக