-------------------------------------
சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
-------------------------------------
பால் : இன்னைக்கு எல்லைப் பிரச்சனைக் குறித்து சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
கோபால் : எந்தெந்த நாட்டுக்கிடையே?
பால் : என்னுடைய அம்மாவுக்கும்.. மனைவிக்கும் இடையே தான்... எல்லை மீறி சண்டை போடுவதில்லை என்று..
கோபால் : 😂😂
-------------------------------------
மன்னன் : என்ன அமைச்சரே இது... இந்தப் புலவர் அகம் பற்றிப் பாடவா, புறம் பற்றிப் பாடவா என்று கேட்கிறார்..?
அமைச்சர் : ஆமாம் மன்னா... எனக்கும் அதுதான் சந்தேகம்... கடந்த வாரம், கலிங்க போரில் அடிதாங்காமல் பஞ்சாய் பறந்து ஓடி வந்தீர்களே... அதை புறம் என்று சொல்ல வருகிறாரா...?? இல்லை நேற்று மகாராணி... உங்களை மொத்து... மொத்து... என்று மொத்தியதை அகம் என்று சொல்ல வருகிறாரா-ன்னு... தெரியலியே? பேசாம பாடவே வேண்டாம்னு எதையாவது கொடுத்து அனுப்பி விடுங்கள்...
மன்னன் : 😕😕
-------------------------------------
நான் யார்?
-------------------------------------
1. சுரங்கத்தில் பிறந்த என்னை சுற்றியிருப்பதோ மரப்பலகை. நான் யார்?
2. என்னை உன்னால் தூக்க முடிந்தால், என்னுள் வர முடியாது. எனினும் என்னை உன்னால் தூக்க முடியாவிட்டால் என்னுள் இருக்க நேரிடும். நான் யார்?
3. என் பருமன் உங்களை போன்றது. ஆனால் நீங்களோ என்னை விட பன்மடங்கு எடையால் அதிகமானவர். நான் யார்?
4. எனது வாழ்க்கை சில மணித்துளிகள். காற்று என் எதிரி. நான் பருமன் குறைந்திருந்தால் வேகமாகவும், பருமன் அதிகமாக இருந்தால் குறைவாகவும் அழிவேன். நான் யார்?
5. சில சமயங்களில் மங்கலாகவும், சில சமயங்களில் பிரகாசமாகவும் இருக்கும் என்னில் பலர் நடக்க ஆசைப்படுவார்கள். நான் யார்?
விடை :
1. பென்சில்
2. சவப்பெட்டி
3. நிழல்
4. மெழுகுவர்த்தி
5. நிலவு
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக