வாடிக்கையாளர்கள் ஏர்டெல் பயன்பாட்டின் ஃபைபர், டிடிஎச், மொபைல் ஆகிய சேவைகளை ஒன்றாக இணைக்க முடியும். இதற்கு வாடிக்கையாளர் எண் மற்றும் ஒற்றை பில் வசதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் முன்னணி வரிசையில் இருக்கும் பாரதி ஏர்டெல் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை ஏர்டெல் பிளாக் திட்டத்தை அறிமுகம் செய்தது. இது இந்தியாவின் இந்தியாவின் முதல் ஆல் இன் ஒன் தீர்வை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் வசதிக்காக அதன் பல்வேறு சலுகைகளை ஒரே ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் கொண்டுவர நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பல்வேறு இணைப்புகள் ஒரே திட்டத்தில்
இணைய சேவை, தொலைபேசி சேவை, பிராட்பேண்ட். டிடிஎச் என பல்வேறு சேவைகளுக்கும் தனித்தனியாக மாதமாதம் பில் கட்ட வேண்டிய நிலை உள்ளது. வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் வெவ்வேறு வகையில் பில்கள் செலுத்த வேண்டிய அவசியம் இருந்தது. சமயத்தில் ரீசார்ஜ்கள் மறக்கப்படும் போது சேவைகள் துண்டிக்கப்படும் இது பயனர்களை உளைச்சலுக்கு உள்ளாக்கலாம். இந்த சிரமங்கள் பல மாதங்களாக தொடர்ந்து நீடித்து வந்தது. வாடிக்கையாளர்களின் பிரச்சனையை தீர்க்க ஏர்டெல் புதுமைப்படுத்தப்பட்ட முடிவை கொண்டு வந்துள்ளது.
ஏர்டெல் பிளாக் (Airtel Black)
ஏர்டெல் பிளாக் பயன்படுத்தும்போது ஒரு வாடிக்கையாளர் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஏர்டெல் சேவைகளை ஒருங்கிணைக்க முடியும். அதாவது ஃபைபர், டிடிஎச், மொபைல் போன்ற சேவைகளை ஒரே பில்லில் பெறலாம். ஏர்டெல் கொண்டுவந்துள்ள இந்த தீர்வுகளை விளக்கமாக பார்க்கலாம்.
ஏர்டெல் பிளாக் ஃபிக்சட் திட்டம் (Fixed Plans)
ஆல் இன் ஒன் திட்டம் ரூ.2099 என்ற விலையில் கிடைக்கிறது. இது ஒரு மாதத்திற்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் பயனர்கள் 3 மொபைல் கனெக்ஷனை ஒருங்கிணைக்கலாம். மேலும் இதில் 1 ஃபைபர் இணைப்பு, 1 டிடிஎச் இணைப்பை பெறலாம். இது பெயர் குறிப்பிடுவது போல் ஆல் இன் ஒன் திட்டமாக இருக்கிறது.
ஃபைபர் மற்றும் மொபைல் திட்டம்
ஃபைபர் மற்றும் மொபைல் திட்டம் விலை ரூ.1598 ஆக இருக்கிறது. இந்த திட்டம் ஒரு மாதத்திற்கு செல்லுபடியாகும். இது 2 மொபைல் இணைப்பு, 1 ஃபைபர் இணைப்பு ஆகியவைகளை ஒருங்கிணைத்து வழங்குகிறது.
டிடிச் ப்ளஸ் மொபைல் இணைப்பு திட்டம்
டிடிச் ப்ளஸ் மொபைல் இணைப்பு திட்டம் விலை ரூ.1349 ஆக இருக்கிறது. இந்த திட்டம் ஒரு மாதத்திற்கு செல்லுபடியாகும். இது 3 மொபைல் இணைப்புகளை வழங்குகிறது. மேலும் 1 டிடிஎச் இணைப்பையும் ஒருங்கிணைத்து வழங்குகிறது.
குறைந்த விலை டிடிஎச் ப்ளஸ் மொபைல் இணைப்பு
டிடிஎச் ப்ளஸ் மொபைல் இணைப்பில் மேலும் ஒரு திட்டம் இருக்கிறது. இந்த திட்டம் விலை ரூ.998 ஆக இருக்கிறது. இது ஒரு மாதத்திற்கு செல்லுபடியாகும். இந்த திட்டம் 2 மொபைல் இணைப்புகள் மற்றும் ஒரு டிடிஎச் இணைப்பை வழங்குகிறது.
ஏர்டெல் பிளாக் திட்டம் குறித்த வழிமுறைகள் அறிய
ஏர்டெல் தேங்க் ஆப் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யவும். அதில் Get Airtel Black Plan அல்லது make your own plan என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.
அருகில் இருக்கும் ஏர்டெல் ஸ்டோர்களுக்கு சென்று ஏர்டெல் பிளாக் திட்டம் குறித்து விசாரித்தால் அனைத்து தகவலும் கிடைக்கும்.
மேலும் வீட்டில் இருந்தே சந்தேகங்களை நிவர்த்தி செய்ய 8826655555 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டால், ஏர்டெல் ஊழியர்கள் உங்களை தொடர்புகொண்டு ஏர்டெல் பிளாக் குறித்து விவரிப்பார்கள்.
மேலும் கூடுதல் தகவல் அறிவதற்கு https://www.airtel.in/airtel-black என்ற தளத்தை அணுகலாம்.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக