Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 1 ஜூலை, 2021

மகனிடம் ஒரு மணி நேரம் மொபைலலை கொடுத்ததால், காரை விற்க நேரிட்ட பரிதாபம்

மொபைல் போன்கள், குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டன. சிறு பிள்ளைகள் கூட அதற்கு அடிமையாகி விட்டார்கள். சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பொழுதுபோக்குக்காக மொபைல்களை கொடுக்கிறார்கள். அதனால் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதோடு, உங்களுக்கு கடுமையான நிதி இழப்பையும் ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

பிரிட்டனில் ஒரு தந்தை தனது காரை விற்க நேர்ந்தது. ஒரு மணி நேரம் விளையாடுவதற்கு தனது மகனுக்கு தனது ஐபோனைக் ( (iPhone) கொடுத்தார். அதன் பிறகு ஐடியூன்ஸ் இடமிருந்து $ 1800 (சுமார் 1 லட்சம் 33 ஆயிரம் ரூபாய்) பில் வந்தது. ஏழு வயது குழந்தை மொபைலில் விளையாடும்போது 1.3 லட்சம் செலவு செய்துள்ளது. பில்லின் நகல் மின்னஞ்சலில் வந்தபோது தந்தைக்கு மயக்கமே வந்து விட்டது. தனது காரை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த மருத்துவர் முஹம்மது முட்டாசாவின் மகன் ஆஷாஸ் முட்டாசா, ரைஸ்-ஆஃப்-பெர்க் (Rise-of-Berk' ) என்ற விளையாட்டை விளையாடினார். இதன் போது அவர் பல விலையுயர்ந்த டாப் அப்களை வாங்கினார். விளையாட்டை விளையாடிதற்கு வந்த பில் தொகையை பார்த்த தந்தைக்கு மயக்கமே வந்து விட்டது.தொடர்ச்சியாக 29 மின்னஞ்சல்கள் ஒன்றன்பின் ஒன்றாக தனது மொபைலில் வந்ததை பார்த்த உடனேயே இது ஏதோ ஆன்லைன் மோசடிக்கு பலியாகிவிட்டோம் என நினைத்தார்.

இருப்பினும், அவர் தீவிரமாக விசாரித்தபோது, ​​ தனது மகன் செய்த காரியம் புரிந்தது. டாக்டர் முஹம்மதுவுக்கு கற்பனை செய்யக்கூட முடியாத அளவுக்கு செலவு ஏற்பட்டது. ஏனெனில் அவர் ஐடியூன்ஸ் பில் கட்டணத்தை செலுத்த தனது காரை விற்க வேண்டியிருந்தது. பாதிக்கப்பட்ட மருத்துவர் இது குறித்து கூறுகையில், 'குழந்தை செய்த இந்த தற்செயலான தவறுக்காக நிறுவனம் என்னைக் கொள்ளையடித்தது. குழந்தைகளின் விளையாட்டுகளுக்கு இவ்வளவு பணம் செலவிட நேரிடும் என்பது பற்றி எனக்குத் தெரியாது.

இது குறித்து ஆப்பிள் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பிய பிறகு, ​​நிறுவனம் அவருக்கு 287 டாலர் (சுமார் 21 ஆயிரம் ரூபாய்) மட்டுமே திருப்பித் தந்ததாக டாக்டர் முஹம்மது கூறினார். அதற்கு பிறகு மீதமுள்ள பில் கட்டணத்தை செலுத்த அவர் தனது காரை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அதிக அளவில் பணம் செலுத்துவது தொடர்பான சம்பவம் இது முதல் முறை அல்ல. கடந்த காலங்களில் கூட, குழந்தைகள் மொபைலில் விளையாடுவதால், பெரும் தொகையை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்ட பல சம்பவங்கள் அம்பலமாகியுள்ளன. சில காலத்திற்கு முன்பு சீனாவில், ஒரு பெண் தவறுதலாக, ஒன்றுக்கு பதிலாக 100 ப்ளேட் நூடுல்ஸை ஆர்டர் செய்திருந்தார். அதே போல், அமெரிக்காவின் நியூயார்க்கில், நான்கு வயது குழந்தை 2,618 டாலருக்கும் அதிகமான பொருட்களை வாங்கியிருந்தது.

உளவியலாளர்கள் குழந்தைகளிடம் மொபைல் போன் கொடுப்பது சரியல்ல என்று கூறுகிறார்கள். இதனால், குழந்தையின் வயதுக்கு ஏற்ப நிகழ வேண்டிய உண்மையான வளர்ச்சி, பாதிக்கப்படுகிறது. இது குழந்தைகளின் கண்களையும் நேரடியாக பாதிக்கும் என்பதால், சீக்கிரமே கண்ணாடி போட்டுக் கொள்ளும் நிலை, கண்களில் குறைபாடு, கண்களில் வறட்சி, சோர்வு போன்ற பிரச்சினைகளை அவர்கள் தொடர்ந்து எதிர்கொள்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக