Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 1 ஜூலை, 2021

இனி மின்சாரம் இல்லாமல் போனை சார்ஜ் செய்யலாம்: அசத்தும் Xiaomi

சீனாவின் மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான சியோமி ஒரு சிறப்புவாய்ந்த சாதனத்தை தயாரிப்பதில் மும்முரமாக உள்ளது. இதன் மூலம் வெறும் ஒலியால் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற சாதனங்களின் பேட்டரிகளை சார்ஜ் செய்ய முடியும்.

Xiaomi Voice Charger: சீனாவின் மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான சியோமி ஒரு சிறப்புவாய்ந்த சாதனத்தை தயாரிப்பதில் மும்முரமாக உள்ளது. இதன் மூலம் வெறும் ஒலியால் ஸ்மார்ட்போன்கள் (Android Smartphones) மற்றும் பிற சாதனங்களின் பேட்டரிகளை சார்ஜ் செய்ய முடியும். இந்த சாதனம் பற்றி விரிவாக தெரிந்துகொள்ளலாம். 

சியோமி காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளது 

இந்தியாவில் நம்பர் -1 ஸ்மார்ட்போன் பிராண்ட் எனக் கூறிக்கொள்ளும் ஷியோமி, இந்த புதிய தொழில்நுட்பத்திற்கான காப்புரிமையையும் தாக்கல் செய்துள்ளது. சியோமியின் ஒலி சார்ஜிங் காப்புரிமையின் படங்கள் சீனாவின் (China) தேசிய அறிவுசார் சொத்து நிர்வாகத்தில் (CNIPA) காணப்பட்டுள்ளன.

ஒலி சாதனம் எவ்வாறு செயல்படும்?

சியோமி (Xiaomi) இந்த காப்புரிமையை ஒரு ஒலி சார்ஜிங் சாதனம், ஆற்றல் சேமிப்பு சாதனம் மற்றும் மின்னணு சாதனம் ஆகியவற்றிற்கு பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இந்த சாதனங்கள் ஒலியைச் சேகரித்து சுற்றுச்சூழல் அதிர்வுகளிலிருந்து இயந்திர அதிர்வாக மாற்றும்.

ஸ்மார்ட்போன்கள் மின்சாரம் இல்லாமல் சார்ஜ் ஆகும் 

இந்த இயந்திர சாதனத்தை மின்சாரமாக மாற்ற, ஷியோமி வாடிக்கையாளர்களுக்கு ஒரு சாதனத்தையும் வழங்கும். இந்த சாதனம் ஏசி மின்னோட்டத்தை டிசி மின்னோட்டமாக மாற்றும். இந்த தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன்கள் (Smartphone) மற்றும் பிற சாதனங்களை பவர் சாக்கெட் இல்லாமல் சார்ஜ் செய்யும் என்று நிறுவனம் கூறுகிறது.

ஸ்மார்ட்போன் 8 நிமிடங்களில் சார்ஜ் ஆகிவிடும் 

கூடுதலாக, சியோமி தனது 200W ஹைபர்சார்ஜ் தொழில்நுட்பத்தையும் அறிவித்துள்ளது. இது 4000 mAh பேட்டரியை வெறும் 8 நிமிடங்களில் சார்ஜ் செய்யும். நிறுவனம் இதில் புதிய Mi சார்ஜரையும் அறிமுகப்படுத்தியது. இது சார்ஜிங் கேபிள் அல்லது ஸ்டாண்ட் இல்லாமல் சாதனத்தின் பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும். ஒரே நேரத்தில் பல சாதனங்களை வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்ய புதிய Mi சார்ஜ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என்று ஷியோமி கூறுகிறது.

வெளியீடு பற்றி விரைவில் அறிவிக்கப்படும்

ஊடக அறிக்கையின்படி, இந்நிறுவனம் தற்போது Mi சார்ஜ் தொழில்நுட்பத்திற்கான 17 காப்புரிமைகளைக் கொண்டுள்ளது. புதிய சார்ஜிங் தொழில்நுட்பத்தில் இது செயல்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் வீட்டு பொருட்களான ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், மேசை விளக்குகள், ஸ்மார்ட் உபகரணங்கள் மற்றும் பிற பொருட்களை எளிதில் சார்ச் செய்ய முடியும். Mi சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது குறித்து நிறுவனம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை.
,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக