இன்ஸ்டாகிராம் தலைவராக இருப்பவர் ஆடம் மொசோரி, இவர், இனி வரும் காலங்களில் புகைப்படங்கள் பகிரக் கூடிய தளமாக இன்ஸ்டாகிராம் என தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார். இந்த பதிவையடுத்தே இன்ஸ்டா பயனர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளது.
புகைப்படங்கள் பகிரமுடியாதா?
இன்ஸ்டாகிராம் தளத்தில் இனி புகைப்படங்கள் பகிரமுடியாது என தெரிவிக்கப்பட்டாலும் அந்த பயன்பாடானது முழுமையான வீடியோ தளமாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் தளம் வீடியோ பதிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பயன்பாடாக மாற இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.
பிரபலமடைந்த இன்ஸ்டா ரீல்ஸ் சேவை
இந்தியாவில் டிக்டாக் செயலி புகழ் பெற்று விளங்கியது. காரணம் இந்த செயலியால் பலர் பிரபலமடைந்தனர். இந்தியர்களின் தகவல்கள் பாதுகாக்கும் பொருட்டு டிக்டாக் உள்ளிட்ட செயலிகள் இந்தியாவில் தடை செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து டிக்டாக் பயன்பாட்டுக்கு இணை மாற்றாக இன்ஸ்டா செயலியில் இன்ஸ்டா ரீல்ஸ் வசதி கொண்டு வரப்பட்டது.
இன்ஸ்டாகிராம் ஷார்ட் வீடியோ பிரிவு
பேஸ்புக் நிறுவனத்தின் மற்றொரு நிறுவனமான இன்ஸ்டாகிராம், ஷார்ட் வீடியோ பிரிவில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. தற்போது டிக்டாக் போன்ற பிற பயன்பாடுகளை மறக்கும் அளவிற்கு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலமடைந்து வருகிறது. இதன்காரணமாகவே இன்ஸ்டாகிராம் விரைவில் புதிய தோற்றம் கொள்ள இருக்கிறது.
இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசோரி
இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசோரி இந்த தகவல் குறித்த முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளார். இனி வரும் காலத்தில் புகைப்படங்கள் பகிரக்கூடிய தளமாக இன்ஸ்டா இருக்காது என குறிப்பிட்டுள்ளார். அதோடு மட்டுமின்றி பொழுதுபோக்கு சார்ந்த முழுமையான தளமாக இன்ஸ்டாவை மாற்ற குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
எதிர்கால முன்னேற்றத்தை கருத்தில் கொண்டே இந்த முடிவு
இன்ஸ்டாகிராமை முழுமையான வீடியோ தளமாக மாற்றுவதற்கு அடிப்படை கட்டமைப்பு டெக்னாலஜி மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராம் பயன்பாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில், பயன்பாட்டின் எதிர்கால முன்னேற்றத்தை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் தலைவர் மொசோரி தெரிவித்துள்ளார்.
வீடியோ, மெசன்ஜர், ஷாப்பிங்
இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் புகைப்பட பதிவேற்றத்தையும் தாண்டி வீடியோ, மெசன்ஜர், ஷாப்பிங் உள்ளிட்டவைகளுக்கு கவனம் செலுத்தி புதிய சேவைகளை வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஷார்ட் வீடியோவில் முன்னணிகளில் ஒன்றாக இருக்கும் இன்ஸ்டா, தற்போது பிரதான ஒன்றாக மாற இருக்கிறது என்பதில் ஆச்சரியமில்லை.
வளர்ச்சிக்கான ஆலோசனையில் இந்த முடிவு
சமீப காலமாகவே இன்ஸடா பயனர்களில் பலர் வீடியோக்களை விரும்புவதாக மொசோரி தெரிவித்தார். இன்ஸ்டா வளர்ச்சிக்கான ஆலோசனையில் இந்த முடிவு அடிப்படையில் புகைப்படங்களை விட வீடியோக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இன்ஸ்டா பயனர்கள் விரைவில் புதுவித அம்சத்தோடு பயன்பாட்டை மேற்கொள்ள இருக்கின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக