இந்தச் சூழ்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் இயங்கி வரும் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனங்களுக்குச் சேவை அளிக்க இந்திய வங்கிகள் மறுப்புத் தெரிவித்தது.
இதனால் இந்திய கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடம் கூட்டணி வைத்து இந்திய முதலீட்டாளர்களுக்குச் சேவை அளித்து வருகிறது. இதற்கும் செக் வைக்க ஜிஎஸ்டி அமைப்புக் களத்தில் இறங்கியுள்ளது.
கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்
இந்தியாவில் இயங்கி வரும் பெரும்பாலான கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனங்களுக்குத் தற்போது இந்திய வங்கிகள் சேவை அளிக்க மறுப்பு தெரிவித்த நிலையில், வெளிநாட்டு கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்துடன் இணைந்து அனைத்து விதமான கிரிப்டோ வர்த்தகமும் செய்து வருகிறது.
ஜிஎஸ்டி வரி
இப்படிப் பார்க்கும் போது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவில் இருப்பது அவர்களின் வாடிக்கையாளர்கள். இதன் மூலம் தத்தம் வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் வர்த்தகம் செய்ய ஜிஎஸ்டி வரிச் செலுத்தியாக வேண்டும். இது முற்றிலும் டிஜிட்டல் சேவை என்பதால் கலால் வரி, சுங்க வரி போன்றவை இருக்காது.
சிங்கப்பூர் அல்லது துபாய்
இந்தியாவில் சேவை அளித்து வரும் பெரும்பாலான கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனங்கள் இந்தியாவில் இல்லை, வெளிநாட்டில் தான் உள்ளது. இதிலும் கடந்த சில வருடங்களாக இந்தியாவில் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனங்களுக்கு நெருக்கடி அதிகமாகியுள்ள நிலையில் சிங்கப்பூர் அல்லது துபாய் போன்ற நாடுகளுக்குச் சென்றுவிட்டது.
மத்திய மறைமுக வரி அமைப்பு
இந்தியாவில் இல்லாத காரணத்தால் கிரிப்டோ வர்த்தகச் சேவைகளுக்கு, எக்ஸ்சேஞ்ச் நிறுவனங்கள் வரி செலுத்துவது இல்லை. இந்நிலையில் மத்திய மறைமுக வரி அமைப்பு இந்த நிறுவனங்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்வதற்காக ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டுமா..? வேண்டாமா..? என்பது குறித்து ஆய்வு செய்யக் களத்தில் இறங்கியுள்ளது.
வரித் துறையில் இருக்கும் வல்லுனர்கள் கூறுகையில், இந்தியாவில் சேவை அளித்து வரும் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனங்கள் online information database access and retrieval (OIDAR) சர்வீஸ் கீழ் வரும்.
OIDAR பிரிவு
OIDAR பிரிவின் படி டிஜிட்டல் அல்லது டேட்டா வாயிலாக ஏதேனும் சேவையை இந்தியர்களுக்கோ அல்லது இந்தியாவில் இருப்பவர்களுக்கோ அளித்தால் கட்டாயம் வரி விதிக்க வேண்டும். ஆனால் நிறுவனங்களுக்கும், வரி துறைக்கும் இந்தக் கட்டமைப்பு குறித்து முழுமையான புரிதல் இல்லாத காரணத்தால் குழப்பம் நிலவுகிறது.
ஜிஎஸ்டி வரி 18 சதவீதம்
ஜிஎஸ்டி வரி இதேவேளையில் இந்தியாவில் இருக்கும் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனங்கள் தாங்கள் பெரும் வருமானத்திற்கு அல்லது கமிஷன் கட்டணங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி செலுத்துவதாக வரித் துறையிடம் இருந்து உறுதிப்படுத்தப்படாத தகவல் கிடைத்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக