Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 22 ஜூலை, 2021

ஐபேட், டிவி, மினி-பிரிட்ஜ் எல்லாமே இருக்கு: அசத்தும் தமிழக ஆட்டோ ஓட்டுநர்.!

சென்னையை சேர்ந்த ஒரு ஆட்டோஇந்தியாவில் கொரோனா தொற்று அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக இந்தியாவில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா வைரஸ் 2-வது அலை உச்சத்தில் இருந்தது. தினந்தோறும் 3 லட்சத்துக்கு அதிகமான கொரோனா பதிப்புகள் உறுதி செய்யப்பட்டன.

மேலும் ஆரம்பத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த காலத்தில் ஆக்ஸிஜன் இல்லாமல் பலர் அவதிப்பட்டனர். அந்த சமயம் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது ஆட்டோக்களை ஆக்ஸிஜன் பொருத்தப்பட்ட குட்டி ஆம்புலன்ஸ்களாக மாற்றி பல உயிர்களை காப்பாற்றினர். அதேபோல் தொற்று அதிகமான காலத்தில் மக்களுக்கு அதிகளவில் ஆட்டோ ஓட்டுநர்கள் உதவி செய்து வந்தனர் என்றுதான்
கூறவேண்டும்.

இப்போது சென்னையை சேர்ந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர் மிகவும் பிரபலமாகியுள்ளார். அவரது பெயர் அண்ணா துரை. இவரின்ஆட்டோ சாதாரண ஆட்டோ போல கிடையாது சற்று வித்தியாசமான அம்சங்களை கொண்டுள்ளது என்று தான் கூறவேண்டும்.

மேலும் இவரின் ஆட்டோ அம்சங்கள் பற்றி முதலில் ஹூயுமன்ஸ் ஆஃப் பாம்பே என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணா துரை குடும்ப வறுமையால் படிப்பை தொடர முடியவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே இவர் ஆட்டோ ஓட்டும் தொழிலுக்கு வந்துள்ளார். குறிப்பாக இவர் இருக்கும் பகுதியில் சிறந்த ஆட்டோவாக தனது ஆட்டோ இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். எனவேதான் இவரது ஆட்டோவில் சானிட்டைசர், மினி-பிரிட்ஜ், மாஸ்க், டிவி, ஐபேட், பத்திரிக்கைகள் என பல வசதிகளை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறார். குறிப்பாக இது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம்.

அதேபோல் இவரின் வீடியோ இணையதளத்தில் அதிக வைரலாகி உள்ளது. பின்பு அண்ணாதுரையின் வீடியோவைப் பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா தொற்று
கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக