வியாழன், 22 ஜூலை, 2021

பறவைகள் எல்லாம் ஏன் இங்க பறந்து வருது? இன்றைய கடி... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

----------------------------------------------
சிரிக்கலாம் வாங்க....!!
----------------------------------------------
மகன் : அப்பா ஒரு பையன் என்ன அடிச்சுட்டாம்பா!
அப்பா : எவன்டா உன்ன அடிச்சது அடையாளம் தெரியுமா?
மகன் : அவனுக்கு ஒரு காது இருக்காதுப்பா.
அப்பா : அவன் காது என்ன ஆச்சு?
மகன் : அதத்தான் நான் கடிச்சு துப்பிட்டேனே.
அப்பா : 😨😨
----------------------------------------------
பாபு : அவர் ஏன் கார் வாங்கினதில் இருந்து ரிவர்ஸ்லயே ஓட்டிட்டு போறார்.
கோபு : காரை விக்கும் போது கி.மீ. குறைவா காண்பிக்கணுமாம் அதுக்காகத்தான்.
பாபு : 😂😂
----------------------------------------------
சிந்தனை துளிகள்..!
----------------------------------------------
🌟 முட்டையை கடினம் ஆக்கும் சுடு தண்ணீர் கிழங்குகளை மென்மையாக்கும்.. அது போல ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் அவரவர் தரமே அவர் முடிவை நிர்ணயிக்கும்.

🌟 முள் குத்தினாலே கத்தும் நாம், டாக்டர் ஊசி போட்ட அசால்ட்டா தாங்கிக் கொள்வோம். வலி என்னவோ ஒன்றுதான்.. ஏற்றுக்கொள்ள துணிஞ்சுட்டா துன்பமும், கவலையும் தூசிதான்..
வாழைப் பழத்தின் பயன்கள்..!
🍌 உடனடி எனர்ஜி கிடைக்கும்.

🎈 மூளைக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்.

🍌 வைட்டமின் ஏ, பி6, சி, இ, கே இருக்கிறது.

🍌 ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

🍌 இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.

🍌 மன அழுத்தம் நீங்கும்.

🍌 ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் கிடைக்கும்.

🍌 பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் கிடைக்கும்.

🍌 மலச்சிக்கல் நீங்கும்.

🍌 அல்சரைத் தடுக்கும்.
----------------------------------------------
சிரிப்புதாங்க வருது..!
----------------------------------------------
👬 நான் என்னோட பள்ளி கால நண்பனுக்கு போன் பண்ணியிருந்தேன்..

👬 என்னடா வேலை பாக்குறன்னு கேட்டேன்.. அவன் சொன்னான்.. நான் இப்போ ஒரு ஸ்பெஷல் ஃப்ராஜக்ட்-ல இருக்கேன்.. பேரு யுஙரய வுhநசஅயட வசநயவஅநவெ ழக ஊநசயஅiஉளஇ யுடரஅinரைஅ யனெ ளுவநநட ரனெநச ய உழளெவசயiநென நnஎசைழnஅநவெ.

👬 ரொம்ப ஆச்சரியமா இருந்திச்சு.. பேசிட்டு வச்சோம்..

👬 பேசி முடிச்ச அப்புறம் அவன் சொன்னதை யோசிச்சப்போ தான் தெரிஞ்சது..

👬 அவன் பொண்டாட்டி கண்காணிப்புல பாத்திரம் விளக்குறதை அவ்வளவு அழகாக ஆங்கிலத்தில் சொல்லிருக்கான், பயபுள்ள..
----------------------------------------------
இன்றைய கடி..!!
----------------------------------------------
 பறவைகள் எல்லாம் ஏன் வெளிநாட்டுல இருந்து இங்க பறந்து வருது?
.
.
.
.
ஏன்னா அது நடந்து வந்து லேட் ஆகும்ல்ல.. அதான்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்