Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 17 ஜூலை, 2021

அருள்மிகு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோவில், திருச்சிராப்பள்ளி.

Malaikottai Uchipillayar Temple : Malaikottai Uchipillayar Malaikottai  Uchipillayar Temple Details | Malaikottai Uchipillayar - Trichy | Tamilnadu  Temple | மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார்
அமைவிடம் : 

திருச்சியின் மிகப்புகழ் வாய்ந்த அடையாளச் சின்னமாக விளங்குவது மலைக்கோட்டை. இது உச்சிப்பிள்ளையார் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இது 275 அடி உயர மலையின் மேல் அமைந்துள்ளது. மலையின் பாதி தூரத்தில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தாயுமானவர் சுவாமி கோவில் ஒன்று உள்ளது. 

மாவட்டம் :

அருள்மிகு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோவில், திருச்சிராப்பள்ளி.

எப்படி செல்வது?

திருச்சி நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை என்று சொல்லும் ஒரு குன்றின் மேல் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களில் இருந்தும் திருச்சிக்கு ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதிகள் உண்டு.

கோயில் சிறப்பு :

பொதுவாக சமதரை அமைப்பிலேயே உள்ள திருச்சி மாநகரின் மத்தியில் சுமார் 83 மீட்டர் உயரமான இம்மலை அமைந்திருப்பது இயற்கையின் சிறப்பாகும்.

மிகப் பழமையான மலைகளுள் ஒன்றான இது, ஏறத்தாழ 3400 மில்லியன் வருடங்கள் பழமையானதாகக் கணக்கிடப்படுகிறது.

இக்கோயிலின் கீழ் உள்ள தாயுமானவர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்று. அப்பர், ஞான சம்பந்தர், மாணிக்கவாசகர், தாயுமான அடிகள் ஆகியோரால் பாடல் பெற்றது.

மலைக்கோட்டையின் மீது இருந்து பார்க்கையில், திருச்சி மாநகரின் எல்லா பக்கமும் ரம்மியமாக தெரியும். மலைக்கோட்டையின் உயரம் 275 அடி. மலைக்கோயிலுக்கு செல்ல 417 படிக்கட்டுகள் உள்ளன. 

இப்படி வடிவமைக்கப்பட்ட கோயிலின் ஆயிரங்கால் புனித மண்டபம் சிறப்பு வாய்ந்தது. இங்கு இன்றும் திருமண வைபவங்கள் நடந்து வருவது மிகச்சிறப்பு.

உச்சிப்பிள்ளையார் கோவில் மலையானது மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு, மலையின் கீழ்ப்பகுதியில் மாணிக்க விநாயகர் தரிசனம் தருகின்றார். மலையின் நடுபகுதியில் தாயுமானவர் சுவாமிகள் தரிசனம் தருகின்றார். மலையின் உச்சியில் இருக்கும் பிள்ளையார் உச்சிப்பிள்ளையாராக காட்சியளிக்கின்றார்.

இக்கோயிலில் குடைந்தெடுக்கப்பட்ட இரண்டு குகைகள் உள்ளன. மேல் குகையில் கிரந்தத்திலும், தமிழிலும் கல்வெட்டு செய்திகள் உள்ளன. கீழ் குகையில் 104 செய்யுள்கள் அந்தாதியாக உள்ளன. 

கோயில் திருவிழா :

விநாயகர் சதுர்த்தி, ஆங்கிலப்புத்தாண்டு, தமிழ்புத்தாண்டு, பொங்கல் ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

பிரார்த்தனை : 

எந்த காரியங்கள் தொடங்கினாலும் இவரை வணங்கி விட்டு தொடங்கினால் காரியங்களில் வெற்றி உறுதி.

நேர்த்திக்கடன் : 

விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்து அருகம்புல் மாலை சாற்றி வழிபடுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக