Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 17 ஜூலை, 2021

திருடன் நல்லவன்... இந்த டவுட் உங்களுக்கும் இருக்கா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

------------------------------------------------------
சரவெடி காமெடிகள்....!!
------------------------------------------------------

ராம் : அந்த கிராமத்துல ஆண்-பெண் எல்லோரும் தினமும் யோகாசனம் பண்ணறாங்களாமே... களவு, குடிப்பழக்கம் இல்லாம எல்லோரும் நல்லவங்களா மாறிட்டாங்களாமே? நீ கேள்விப்பட்டியா?
குமார் : இல்லைங்க, நான் கோவில்பட்டி.
ராம் : 😖😖
--------------------------------------------------------
அமலா : அவர் கிரிக்கெட் பைத்தியம்னு எப்படி சொல்ற..? 
விமலா : விதி விளையாடிருச்சின்னு சொன்னா, ஸ்கோர் என்னனு கேக்குறாரு?
அமலா : 😅😅
--------------------------------------------------------
ஆசிரியர் : காது கேக்காதவனை நாம என்னன்னு சொல்லணும்...?
மாணவன் : என்ன வேணாலும் சொல்லலாம், அவனுக்கு கேக்கவா போகுது...?
ஆசிரியர் : 😬😬
--------------------------------------------------------
இது சிரிக்க மட்டுமே.... திருடன் நல்லவன்...!!
--------------------------------------------------------
ஒரு டாக்டரோட எதிர்பார்ப்பு
எல்லோரும் நோயாளியா இருக்கணும்...

ஒரு வக்கீலோட எதிர்பார்ப்பு
எல்லோரும் பிரச்சனையோட இருக்கணும்...

ஒரு போலீசாரோட எதிர்பார்ப்பு
எல்லோரும் கிரிமினலா இருக்கணும்...

ஆனா ஒரு திருடன் மட்டும்தான்
எல்லோரும் வசதியா இருக்கணும்... 
ராத்திரி நிம்மதியா தூங்கணும்னு நினைப்பான்...

--------------------------------------------------------!
குறளும்... பொருளும்...!!
--------------------------------------------------------
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

பொருள் :

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.
--------------------------------------------------------
நாய்க்கு கூட தெரியுது... நமக்கு தெரியல !!
--------------------------------------------------------
சிறு தூரம் வந்த பிறகு இனி நம்மலால நடக்க முடியாதுன்னு நெனச்சு மூச்சு வாங்கி நிற்கும்போது...
உன்னால நடக்க இல்ல... ஓட கூட முடியும்னு சொல்லி நாய் துரத்தும் பாரு...
அப்போ நம்மகிட்ட எவ்ளோ சக்தி இருக்கும்னு நம்மள விட அந்த நாய்க்குதான் தெரியும்...
--------------------------------------------------------
ஒரு டவுட்டு...!!
--------------------------------------------------------
உளுந்த வடை எண்ணெய்ல விழுந்தனால 
அது உளுந்த வடையா? 

இல்ல.. உளுந்து போட்டதுனால
அது உளுந்த வடையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!