Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 17 ஜூலை, 2021

ஏர் இந்தியா யாருக்கு.. கைபற்ற நினைக்கும் விமான நிறுவனங்கள்.. ஸ்பைஸ்ஜெட் ஆயத்தம்..!

 தீவிர முயற்சி

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, சில பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க முனைந்து வருவது நாடறிந்த ஒரு விஷயமே.

அந்த வகையில் முன்னணி நிறுவனங்களாக பிபிஎசில், எல்ஐசி, ஏர் இந்தியா பல நிறுவனங்களும், சில வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என பட்டியலே உள்ளது.

அந்த வகையில் பெரும் கடன் பிரச்சனையால் தத்தளித்து வரும் ஏர் இந்தியா நிறுவனத்தின், பங்குகளை விற்பனை செய்ய அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றது.

தீவிர முயற்சி

எனினும் கொரோனாவின் காரணமாக ஏர் இந்தியாவின் பங்கு விற்பனையானது பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில், கால தாமதமாகிக் கொண்டு வந்து கொண்டுள்ளது. இதற்கிடையில் அரசு அதன் நிதி இலக்கினை அடைய விற்க வேண்டிய கட்டாயத்திற்குள் அரசு உள்ளது. எனினும் தற்போது அதன் பங்கு விற்பனைக்கான தீவிர முயற்சிகளை செய்து வருகின்றது.

ஏலத்திற்கு ஆயத்தமாகும் ஸ்பைஸ்ஜெட்

இதற்கிடையில் ஏர் இந்தியாவினை வாங்க பல நிறுவனங்களும் திட்டமிட்டு வருகின்றன. இந்த நிறுவனத்தினை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டு வருகின்றன. ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏலத்தில் ஆர்வமாக உள்ள நிலையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங், 1 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதியினை திரட்டும் வேலையில், தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பங்கு விற்பனையா?

இதற்காக அஜய் சிங், தனது ஸ்பைஸ்ஜெட்டின் சரக்கு பிரிவில் உள்ள தனது பங்குகளை குறைப்பதன் மூலம், 300 மில்லியன் டாலரை திரட்டலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் அஜய் சிங்கிற்கு கிட்டதட்ட 60% பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தனி நிறுவனமான மாற்றலாம்

மேலும் இந்த பட்ஜெட் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் கடந்த ஜூன் 30 அன்று பங்கு சந்தைக்கு அளித்த அறிக்கையில், பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு, அதன் சரக்கு வணிகத்தினை தனி நிறுவனமாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

டாடாவும் போட்டியா?

இதற்கிடையில் அரசு, ஏர் இந்தியாவுக்கான ஏலத்திற்கு சமர்பிக்க ஆகஸ்ட் மூன்றாம் வாரம் காலக்கெடுவினை நிர்ணயித்துள்ளது. சுமார் 37,000 கோடி கடன் பிரச்சனையில் தத்தளிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தினை வாங்க, டாடா, அஜய் சிங்கிற்கு பலத்த போட்டியாளராக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகின்றது. எப்படியிருப்பினும் இது குறித்து டாடா தரப்பில் எந்தவிதமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக