Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 17 ஜூலை, 2021

புதியதாக அட்வென்ச்சர் பைக்கை அறிமுகப்படுத்த தயாராகும் ஹோண்டா!! என்எக்ஸ்200-ஆ?

புதியதாக அட்வென்ச்சர் பைக்கை அறிமுகப்படுத்த தயாராகும் ஹோண்டா!! என்எக்ஸ்200-ஆ?ஹோண்டா 2 வீலர்ஸ் நிறுவனம் அடுத்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் புதிய மோட்டார்சைக்கிள் ஒன்றை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய ஹோண்டா பைக் எந்த மாதிரியானதாக இருக்கும் என்பது உள்ளிட்ட விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆகஸ்ட்டில் புதிய ஹோண்டா மோட்டார்சைக்கிள் வெளிவரவுள்ளதாக தகவல்கள் மட்டுமே வெளியாகியுள்ளதே தவிர்த்து இதுகுறித்த எந்தவொரு அறிவிப்பையும் ஹோண்டா 2 வீலர்ஸ் தற்போதுவரையில் வெளியிடவில்லை.

பைக் தேக்கோ செய்திதளத்தின் மூலம் நமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி பார்க்கும்போது, இந்த புதிய பைக், விற்பனையில் உள்ள ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கின் அட்வென்ச்சர் வெர்சனாக இருக்கலாம். இதற்கு ‘என்எக்ஸ்200' என ஹோண்டா பெயர் வைக்க வாய்ப்புள்ளது.

புதியதாக அட்வென்ச்சர் பைக்கை அறிமுகப்படுத்த தயாராகும் ஹோண்டா!! என்எக்ஸ்200-ஆ?

ஏனெனில் இத்தகைய பெயரை கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்திய சந்தைக்காக ஹோண்டா 2வீலர்ஸ் நிறுவனம் பதிவு செய்திருந்தது. ஹார்னெட் 2.0 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.31 லட்சமாக உள்ளது. இதனை காட்டிலும் என்எக்ஸ்200 பைக்கின் விலை ரூ.15,000 வரையில் அதிகமாக நிர்ணயிக்கப்படலாம்.

ஹோண்டா சிஎக்ஸ்-02 கான்செப்ட் மற்றும் சீன சந்தையில் விற்பனையில் உள்ள ஹோண்டா சிபிஎஃப்190 டிஆர் மோட்டார்சைக்கிள்களின் கலப்பு வெர்சனாக என்எக்ஸ்200 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஸ்போர்டியான தோற்றத்தையும், தொலைத்தூர பயணங்களுக்கான அம்சங்களையும் இந்த புதிய அட்வென்ச்சர் பைக்கில் எதிர்பார்க்கலாம்.

இருப்பினும் ப்ளாட்ஃபாரம் மற்றும் என்ஜின் உள்ளிட்டவற்றை ஹார்னெட் 2.0 பைக்கில் இருந்து தான் இது பகிர்ந்து கொள்ளும் என தெரிகிறது. புதிய வைர ஃப்ரேம் சேசிஸில் வடிவமைக்கப்படுகின்ற ஹார்னெட் 2.0 பைக்கில் 184.4சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு ஃப்யுல் இன்ஜெக்டட் என்ஜின் வழங்கப்படுகிறது.

மேலும் இந்த ஹார்னெட் மாடலில் வாகனத்தின் எரிபொருள் திறனை மேம்படுத்தும் விதமாக ஹோண்டா ஈக்கோ தொழிற்நுட்பத்துடன் ப்ரோகிராம்டு ஃப்யுல்-இன்ஜெக்‌ஷன் (PGM-FI) பொருத்தப்படுகிறது. இந்த தொழிற்நுட்பம் எரிபொருள் மற்றும் காற்றை சரியான கலவையில் கலந்து என்ஜினிற்கு வழங்க உதவுகிறது.

இவற்றின் உதவியுடன் ஹார்னெட் 2.0 பைக்கின் என்ஜின் அதிகப்பட்சமாக 8,200 ஆர்பிஎம்-இல் 17.2 பிஎச்பி மற்றும் 6,000 ஆர்பிஎம்-இல் 16.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. என்ஜின் மட்டுமின்றி ஹார்னெட்டில் வழங்கப்படும் 17-இன்ச் அலாய் சக்கரங்கள் தான் என்எக்ஸ்200 பைக்கிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

அதேபோல் ஹார்னெட்டில் ப்ரேக்கிங் பணிக்கு சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உடன் இருசக்கரத்திலும் வழங்கப்படும் டிஸ்க் ப்ரேக்குகள் அப்படியே என்எக்ஸ்200 பைக்கிலும் தொடரப்படலாம். சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் ஹார்னெட் 2.0 பைக்கில் வழங்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக