Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 14 ஜூலை, 2021

டொயோட்டா நிறுவனத்தின் சொகுசு காரை வாங்கி குவிக்கும் இந்தியர்கள்... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க!

டொயோட்டா நிறுவனத்தின் சொகுசு காரை வாங்கி குவிக்கும் இந்தியர்கள்... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க!

டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு எம்பிவி கார் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் தற்போது கிடைக்கும் மிகவும் சொகுசான எம்பிவி கார்களில் டொயோட்டா வெல்ஃபயர் காரும் ஒன்று. 89.90 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற விலையில் டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது இந்திய பணக்காரர்களுக்கு விருப்பமான எம்பிவி கார்களில் முக்கியமானதாக உள்ளது.

நடப்பாண்டு ஜூன் மாதத்தில் இந்திய சந்தையில் 63 வெல்ஃபயர் எம்பிவி கார்களை டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, விற்பனையில் 29 சதவீத வளர்ச்சியை டொயோட்டா வெல்ஃபயர் பதிவு செய்துள்ளது. ஏனெனில் கடந்தாண்டு ஜூன் மாதம் டொயோட்டா நிறுவனம் 49 வெல்ஃபயர் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

அதே சமயம் டொயோட்டா நிறுவனம் நடப்பாண்டு மே மாதம் வெறும் ஒரே ஒரு வெல்ஃபயர் காரை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் அதன்பின் வந்த ஜூன் மாதத்தில் 63 வெல்ஃபயர் கார்கள் விற்பனையாகி உள்ளன. இந்த வகையில் பார்த்தால், டொயோட்டா வெல்ஃபயர் 6200 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் இந்திய சந்தையில் மிகவும் குறைவாக விற்பனையான டொயோட்டா நிறுவனத்தின் கார் யாரிஸ் ஆகும். டொயோட்டா நிறுவனம் கடந்த மாதம் வெறும் 5 யாரிஸ் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. மறுபக்கம் டொயோட்டா கேம்ரி 38 யூனிட்கள் விற்பனை என்ற எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

அதே சமயம் கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டொயோட்டா நிறுவனத்தின் கார் என்ற பெருமையை இன்னோவா க்ரிஸ்ட்டா பெற்றுள்ளது. 2,973 இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களை கடந்த ஜூன் மாதம் டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. டொயோட்டா வெல்ஃபயரை போன்று, இதுவும் எம்பிவி ரக கார்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவியை பொறுத்தவரை, இந்திய சந்தையில் கிடைக்கும் மிக சௌகரியமான கார்களில் ஒன்றாக கூறலாம். அந்த அளவிற்கு தாராளமான இடவசதியை இந்த எம்பிவி பெற்றிருப்பதுடன், ஏராளமான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. எனவேதான் பணக்கார வாடிக்கையாளர்களின் முதன்மை தேர்வுகளில் ஒன்றாக டொயோட்டா வெல்ஃபயர் திகழ்கிறது.

வசதிகளை பொறுத்த வரையில், 17 ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், ட்யூயல் சன்ரூஃப், மூன்று-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், 16 கலர் ஆம்பியண்ட் லைட் மற்றும் பின் இருக்கைகளில் பொழுதுபோக்கு திரை என்று ஏராளமான வசதிகளை டொயோட்டா வெல்ஃபயர் பெற்றுள்ளது. அத்துடன் வெளிப்புறத்தில் முழு எல்இடி லைட்டிங் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிரபலங்கள் பலர் டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி காரை சொந்தமாக வைத்துள்ளனர். இதில், மலையாள திரையுலக சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கியமானவர். மோகன்லாலுக்கு அடுத்தபடியாக சுரேஷ் கோபியும் டொயோட்டா வெல்ஃபயர் சொகுசு எம்பிவி காரை வாங்கினார். இப்படி ஏராளமான பிரபலங்களிடம் டொயோட்டா வெல்ஃபயர் இருந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக