
பெட்ரோல் பங்கிற்கு வந்தவர்களுக்கு சாக்லேட், கேக் என இனிப்புகளை வழங்கி ஆம் ஆத்மி கட்சியினர் அமர்களப்படுத்தியிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே பார்க்கலாம்.
பெட்ரோல், டீசல் விலை வரலாற்றை முறியடிக்கும் வகையில் தொடர் உயர்வைச் சந்தித்து வருகின்றது. இதனால், ஏழை மற்றும் எளிய மக்கள்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த மாதிரியான சூழ்நிலையில் ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கோவாவைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியினர் பெட்ரோல் பங்கில் கேக் வெட்டி கொண்டாடியிருக்கின்றனர்.
எரிபொருள் நிரப்ப வந்த வாகன ஓட்டிகளுக்கு கேக் மற்றும் சாக்லோட் போன்ற இனிப்புகளை வழங்கி அவர்கள் விநோத முறையில் ஒன்றிய விமர்சித்திருக்கின்றனர். கோவா யூனியன் பிரதேசத்தில் அரங்கேறிய இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே நெட்டிசன்கள், காங்கிரஸ் ஆட்சியின்போது பாஜகவினர் பெட்ரோல், டீசல் விலையுயர்வைக் கண்டித்து நடத்திய போராட்டங்களின் புகைப்படங்களை மீம்ஸ்களாக போட்டு விமர்சித்து வரும் வேலையில், அரசியல்வாதிகள் தங்களின் பங்காக ஒன்றிய அரசை விநோத போராட்டங்களால் விமர்சித்து வருகின்றனர்.
கோவாவின் பனாஜி பகுதியிலேயே கேக் மற்றும் சாக்லேட்டு வழங்கும் நிகழ்வு அரங்கேறியிருக்கின்றது. இன்றைய தேதி நிலவரப்படி (ஜூலை 26) பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையை பொருத்தவரை பெட்ரோல் லிட்டர் ரூ.102.49க்கும், டீசல் லிட்டர் ரூ. 94.39 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலையுயர்வைப் பொருத்து பெட்ரோல், டீசல் விலை ஒவ்வொரு நாளும் ஏற்றம், இறக்கத்தைச் சந்தித்து வருகின்றன. ஆனால், சமீப காலமாக தொடர்த்தை மட்டுமே இவை பெற்று வருகின்றன. ஆகையால், பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்து காணப்படுகின்றது.
இதற்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் அதிகப்படியான வரி விதிப்பே காரணமாகும். ஆம், வாட் மற்றும் சரக்கு கட்டணங்கள் ஆகியவற்றினாலேயே இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ. 100ஐயும், டீசல் விலை ரூ. 90 ஐயும் தாண்டக் காரணமாக இருக்கின்றன.
பெட்ரோலின் விலையில் 60 சதவீதமும், டீசல் விலையில் 54 சதவீதமாகவும் ஒவ்வொரு லிட்டருக்கும் நாம் மாநில மற்றும் ஒன்றிய அரசுகளுக்கு வரியாக செலுத்தி வருகின்றோம். மிக தெளிவாகக் கூற வேண்டுமானால், ஒன்றிய அரசுக்கு மட்டும் பெட்ரோல் ஒரு லிட்டர் வாங்க ரூ. 32.90 வரை நாம் வரியாக செலுத்துகின்றோம்.
இதேபோன்று, டீசலுக்கு ரூ. 11.80 வரை வரியாக செலுத்துகிறோம். இதன் காரணத்தினாலேயே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் குறைந்து காணப்படுகின்றநிலையிலும், இந்தியாவில் மிகக் கடுமையாக உயர்ந்து காணப்படுகின்றது. இதனைக் கண்டிக்கும் விதமாக ஆம் ஆத்மி கட்சியினர் பெட்ரோல் பங்கில் கேக் மற்றும் சாக்லேட் வழங்கி விநோத போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக