Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 21 ஜூலை, 2021

சர்க்கரை ரேஷன் கார்டு-ஐ எப்படி அரிசி கார்டு-ஆக மாற்றுவது.. இதோ முழு விவரங்கள்..!

 ரேஷன் கார்டில் என்னென்ன வகைகள்

ரேஷன் கார்டு என்பது பொருட்களை வாங்க மட்டும் அல்லாது, இன்றைய காலக்கட்டங்களில் சிலிண்டர் வாங்கவும், அடையாள ஆவணமாகவும் உள்ளது

இன்று பல சாமனிய மக்களின் குடும்பங்களிலும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு மிகப்பெரிய ஆறுதலாகவும் உள்ளது.

இந்தியாவில் குடும்பத்தின் வருவாயை பொறுத்து ரேஷன் கார்டு என்பது 5 வகைகளில் உள்ளது. ஆக உங்களுக்கு ஏற்ற ஒரு கார்டினை தேர்தெடுத்து விண்ணப்பிக்கலாம். ஒரு வேளை உங்களது கார்டானது சர்க்கரை அட்டையாக இருந்தால், அதனை அரிசி வகையான கார்டாகவும் மாற்றிக் கொள்ளலாம். அதனை பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்கவிருக்கிறோம்.

ரேஷன் கார்டில் என்னென்ன வகைகள்

PHH என்று குறிப்பிட்டிருக்கும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அரிசி, உட்பட அனைத்து பொருட்களும் கொடுக்கப்படும். இந்த கார்டுகளுக்கு முன்னுரிமை உண்டு.

இதே PHH - AAY என்ற குறியீடுள்ள ரேஷன் கார்டுக்கு, 35 கிலோ அரிசி உட்பட அனைத்துப் பொருட்களையும் பெற்றுக்கொள்ளலாம்.

NPHH என்று குறிப்பிடப்பட்டுள்ள ரேஷன் கார்டில், அரிசி உட்பட அனைத்து பொருட்களும் கிடைக்கும்.

NPHH - s என்ற குறியீடு உள்ள ரேஷன் கார்டுக்கு அரிசி தவிர, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்கலாம். எனினும் முன்னுரிமை இல்லை என வரும்.

ரேஷன் அட்டையில் NPHH - Nc என்று குறிக்கப்பட்டிருந்தால், அதை ஒரு அடையாளமாகவும், முகவரிக்கான சான்றாக மட்டுமே பயன்படுத்த முடியும். நியாய விலைக்கடையில் எந்த பொருளும் வாங்க முடியாது.

முன்பு என்ன பார்த்தோம்?

முந்தைய கட்டுரையில் எப்படி 15 நாளில் ஸ்மார்ட் கார்டினை பெறலாம் என https://tamil.goodreturns.in/classroom/how-to-get-a-ration-card-within-15-days-in-tamil-nadu-check-details-024317.html இந்த கட்டுரையில் பார்த்திருந்தோம். இன்று ஒரு வேளை நீங்கள் முன்னர் வாங்கியிருந்த கார்டினை, வேறு வகையாகவும் மாற்றிக் கொள்ளலாம். இது ஆன்லைன் முறையிலும், ஆஃப் லைனிலும் மாற்றிக் கொள்ளலாம்.

ஆஃப் லைன் கார்டில் எப்படி?

ஆஃப் லைனில் இந்த கார்டினை வேறு கார்டாக மாற்ற, இதற்கான விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து, தகுந்த ஆவணங்களுடன் இணைத்து, தாலூகா அலுவலகத்தில் உள்ள TSO பிரிவில் கொடுக்க வேண்டும். அவைகள் சரிபார்க்கப்பட்டு பின்னர் உங்களது கார்டு வகையானது மாற்றம் செய்யப்படும்.

ஆன்லைனில் எப்படி?

முதலில் https://tnpds.gov.in/ என்ற இணையதளத்தினை ஒபன் செய்து கொள்ளுங்கள். ஆன்லைனில் இந்த மாற்றம் செய்ய வேண்டுமெனில் உங்கள் ரேஷன் கார்டில் பதிவு செய்த மொபைல் எண் தேவை. ஆக அதனையும் கையில் வைத்துக் கொண்டு அதன் பிறகு மாற்றம் செய்யலாம்.

ஆன்லைனில் லாகின் செய்யுங்கள்

அதன் பிறகு பயனாளர் நுழைவு என்ற ஆப்சனை கிளிக் செய்து, அதில் உங்கள் ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணினை கொடுக்கவும்.

அதன் பிறகு கேப்ட்சா குறியீட்டினை கொடுத்து, பதிவு செய் என்ற ஆப்சனை கிளிக் செய்யுங்கள்.

இதன் பிறகு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண் வரும். அதனை பதிவு செய்து கிளிக் செய்யவும்.

என்னென்ன மாற்றங்கள் செய்யலாம்

அதன் பிறகு இது அடுத்த பக்கத்தில் தொடங்கும். அந்த பக்கத்தில் கீழாக உள்ள அட்டை பிறழ்வுகள் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

அதன் பிறகு புதிய கோரிக்கை என்ற ஆப்சன் இருக்கும். அதனை கிளிக் செய்து கொள்ளுங்கள். இதில் குடும்பத் தலைவர் பெயர், அட்டை வகை மாற்றம், சிலிண்டர் எண்ணிக்கை மாற்றம், குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை மாற்றம், முகவரி மாற்றம், குடும்ப உறுப்பினர் நீக்க, குடும்ப உறுப்பினர் சேர்க்க என்ற பல ஆப்சன்கள் இருக்கும். அதில் அட்டை வகையை மாற்றம் என்ற ஆப்சனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

அடிக்கடி செக் செய்யுங்கள்

அதில் தற்போது உங்களது கார்டு என்ன வகை, அதனை என்ன வகையான மாற்ற விரும்புகிறீர்கள் என்பது கட்டத்தில் வரும். சில நேரங்களில் இந்த மாற்றம் செய்ய முடியாமல் போகலாம். இந்த ஆப்சன் பிளாக் செய்யப்பட்டிருக்கும். ஆக அவ்வப்போது இந்த இணையத்தில் சென்று நீங்கள் செக் செய்து கொள்ளுங்கள். ஏனெனில் பல நேரங்களில் NPHH - Nc என்ற அடையாள, முகவரிக்கான சான்றாக மட்டுமே பயன்படுத்தப்படும் அட்டை மட்டுமே ஆப்சனாக இருக்கலாம்.

குறிப்பு எண்ணை வைத்துக் கொள்ளுங்கள்

எனினும் நீங்கள் மாற்றம் செய்ய ஆப்சன் உள்ளது எனில், மாற்றம் செய்யக்கூடிய அட்டையை கொடுத்து, உறுதிப்படுத்தல் என்பதன் கீழ் உள்ள பாக்ஸினை கிளிக் செய்து, பதிவு செய்யுங்கள். இது செயல்பாட்டுக்கு பின்னர் உங்களுக்கு குறிப்பு எண் ஒன்று வரும். இதனை எடுத்து வைத்துக் கொண்டால் மட்டுமே, உங்களது கார்டின் ஸ்டேட்டஸினை பார்க்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக