தொலைத்தொடர்பு
நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வருகிறது. ஜியோ
வருகைக்கு பிறகு பிற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடும் சவாலை சந்தித்து
வருகின்றன. இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு ஆபரேட்டராக
இருப்பது ஏர்டெல். இந்த நிலையில் ஏர்டெல்லின் ஆன்லைன் வங்கிப் பிரிவான
ஏர்டெல் பேமெண்ட் வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவைகளை
அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த அம்சமானது பயனர்கள் தங்கள்
ஸ்மார்ட்போன்களில் உள்ள தொடர்புகளுக்கு யுபிஐ கட்டணம் செலுத்த
அனுமதிக்கிறது.கட்டணம் செலுத்துதல் அம்சம்
கட்டணம் செலுத்துதல் அம்சமானது பயனர்களால் பயன்படுத்தப்படும் யுபிஐ அம்சத்தை பொருட்படுத்தாமல் தொடர்புகளில் இருக்கும் நபர்களின் யுபிஐ ஐடியை எப்போதும் காண்பிக்கிறது. எனவே இதன்மூலம் கட்டணம் செலுத்துவதற்கு பயனர் யுபிஐ ஐடி அல்லது கணக்கு விவரங்களை உள்ளிட தேவையில்லை என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணம் செலுத்தும் தேர்வு
புதிதாக தொடங்கப்பட்ட அம்சத்தை பயன்படுத்த பயனர் BHIM UPI பயன்பாட்டின் கீழ் பணம் செலுத்தும் தேர்வை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் பயனர்கள் "தொடர்புகளுக்கு பணம் அனுப்பு" என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.
எளிமையான, பாதுகாப்பான மற்றும் தடையற்ற அனுபவம்
இதுகுறித்து ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்க் தலைமை இயக்க அதிகாரி கணேஷ் அனந்தநாராயணன் கூறுகையில், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எளிமையான, பாதுகாப்பான மற்றும் தடையற்ற அனுபவம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். தொடர்புகளுக்கான கட்டணத்துடன் தங்களது பயனற்கள் ஒவ்வொரு முறையும் வங்கி விவரங்கள் அல்லது யுபிஐ ஐடியை உள்ளிடுவது குறித்த வருத்தமடையே தேவையில்லை. இந்த அம்சம் வாடிக்கையாளர்களின் வசதியை பூர்த்தி செய்து எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்கும் என கூறினார்.
கணக்குகள் திறப்பவரின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஏர்டெல் அதன் பயனர்களை தங்கள் கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு மாற்ற அனுமதிக்கிறது. இதில் பயனர்கள் தங்கள் வங்கி கணக்கு எண், ஐஎஃப்எஸ்சி குறியீடு மற்றும் பிற விவரங்களை உள்ளிட வேண்டும். கொரோனா பூட்டுதல் காரணமாக ஆன்லைன் பரிவர்த்தனை அதிகரிக்கத் தொடங்கியது இதன்காரணமாகவே கணக்குகள் திறப்பவரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை
ஏர்டெல் பேமெண்ட் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்பு கணக்கில் 1 லட்சத்துக்கும் மேல் டெபாசிட் செய்தால் வருடத்திற்கு 6% வட்டி விகிதம் வழங்கப்படும் என அறிவித்தது. வங்கிகளுக்கு சென்று பணம் செலுத்துவது என்பது இந்த காலக்கட்டத்தில் கடினமாக இருக்கிறது. இதை எளிமையாக்க ஆன்லைன் பரிவர்த்தனைகளில் பல அம்சங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
வளர்ந்து வரும் டிஜிட்டல் பேமெண்ட் வசதி
டிஜிட்டல் இந்தியாவின் செயல்பாட்டின் பிரதான ஒன்று டிஜிட்டல் பேமெண்ட். டிஜிட்டல் பேமெண்ட் மேற்கொள்வதற்கு பல்வேறு பயன்பாடுகள் உள்ளது. தற்போதைய காலக்கட்டத்தில் டிஜிட்டல் பேமெண்ட் என்பது சிறிய தொழில் முதல் பெரிய தொழில்வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கொரோனோ வைரஸ் பரவல் நமது பொருளாதாரத்தை பெரிதளவு பாதிப்படைய செய்துள்ளன. இதன்காரணமாக சிலர் வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஒரு சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஊதியக் குறைப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றன.
அதிகரிக்கும் ஆன்லைன் பரிவரத்தனை
இந்த சூழ்நிலை தற்போது பல்வேறு டிஜிட்டல் முறையை பிரதானப்படுத்தி வருகின்றன. இந்த பூட்டுதல் நேரத்தில் டிஜிட்டல் முறையை செயல்படுத்தி வருகின்றன. இதில் பல்வேறு செயல்களுக்கும் டிஜிட்டல் முறையே பிரதானமாக்கப்பட்டும் வருகின்றன. ஆன்லைன் பறிமாற்றம் என்பது வணிகர்கள் மற்றும் நிதி நிறுவனங்களிடையே அதிகரித்து வருகிறது. இதைதொடர்ந்து பல்வேறு பிற சேவை நிறுவனங்களும் ஆன்லைன் பரிமாற்றம் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக