ஆன்லைன்
ஷாப்பிங் என்பது இப்பொது மிகவும் இயல்பான ஒரு காரியமாகிவிட்டது.
ஈ-காமர்ஸின் மிகவும் பொதுவான பிரச்சினை என்னவென்றால், ஒருவர் எதையாவது
ஆர்டர் செய்யும் போது அவர்கள் எதிர்பார்க்காத பொருட்கள் சில நேரங்களில்
டெலிவரி செய்யப்படுகிறது. நிறுவனத்தின் பக்கம் இருந்து பார்த்தால் விலை
பிழை மற்றும் சலுகை பிழைகள் ஏராளமாக நடைபெறுகிறது. அப்படி சமீபத்தில்
அமேசான் வலைத்தளத்தில் தோன்றிய விலை பிழை சிக்கலை தான் நாம்
பார்க்கப்போகிறோம்.
1.8 டன் தோஷிபா 2021 உயர் விலை ஏசியை 5,900 ரூபாய்க்கு வழங்கிய அமேசான்
ஆன்லைன் ஷாப்பிங்கில் தள்ளுபடிகள் மற்றும் பணத்தை திரும்பப் பெறுவது என்பது மிகவும் சிக்கலான ஒன்றல்ல என்றாலும் கூட, சில விலை பட்டியல்கள் உண்மையாக இருப்பது பயனர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்பதே உண்மை. இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியா சமீபத்தில் 1.8 டன் தோஷிபா 2021 உயர் விலை ரேஞ்ச் ஏர் கண்டிஷனரை வெறும் ரூ .5,900 என்ற தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வழங்கியது. ஆனால் இதில் ஏற்பட்ட சிறிய பிழை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏசியின் அசல் விலை ரூ .96,000 -திற்கும் அதிகமா?
இந்த ஏசியின் அசல் விலை முதலில் ரூ .96,700 என்பதில் இருந்தது. ஆனால், அமேசான் நிறுவனம் செவ்வாயன்று அறிவித்த சலுகையில் ஒரு பகுதியாக இந்த சாதனத்தின் சலுகை விலை ரூ. 90,800 ஆக வலைப்பக்கத்தில் மாறியிருக்க வேண்டும். ஆனால், இந்த ஏசியை அமேசான் நிறுவனம் விற்பனைக்கு வழங்கிய போது வெறும் ரூ .5,900 என்று சுருக்கமாக பட்டியலிட்டு அதன் பக்கத்தில் இருந்த பிழையைக் கவனிக்க மறந்துவிட்டது.
அமேசான் கவனிக்க மறந்த பிழையால் எழுந்த சர்ச்சை
இதனால் அமேசான் பயனர்களுக்கு 94% தள்ளுபடி கிடைத்தது. இதில் மற்றொரு சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த சலுகையை நிறுவனம் மாதாந்திர தவணை திட்டத்திலும் சேர்ந்திருந்தது. இதன் படி பயனர்கள் மாதம் ரூ .278 மட்டுமே செலுத்தினால் போதும் என்ற விருப்பத்தையும் வலைப்பக்கம் காட்டியது. இதன் விளைவாக, சில வாடிக்கையாளர்கள் அடுச்சது லக் என்று நம்பி ரூ.96,700 விலை கொண்ட ஏசியை வெறும் ரூ. 5800 விலையில் வாங்க ஆர்டர் செய்துள்ளனர்.
கிடைத்த கேப்பில் ரூ. 5800 விலையில் ஆர்டர் செய்த வாடிக்கையாளர்கள்
அமேசான் பக்கத்தில் கட்டப்பட்ட அதே ரூ. 5800 விலையில் ஒரு சில வாடிக்கையாளர்கள் ஆர்டர்களை பதிவு செய்ய முடிந்தது என்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அமேசான் நிறுவனம் அதன் தவறை உணர்ந்த பிறகு, ஈ-காமர்ஸ் நிறுவனம் விற்பனை விலை, சலுகைகள் மற்றும் பொருளின் தள்ளுபடி ஆகியவற்றை உடனடியாக மாற்றியது. இருப்பினும், அதற்குள் ஏராளமான பயனர்கள் அந்த ஏசியை வாங்க ஆர்டர் செய்துவிட்டனர். இந்த பிழை செய்தியும் வைரல் ஆகிவிட்டது.
இப்போது விலை மாற்றப்பட்ட அதே தோஷிபா ஏசியின் விலை என்ன?
இப்போது அதே தோஷிபா 5-ஸ்டார் இன்வெர்ட்டர் ஏசி ரூ .59,000 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அசல் விலையிலிருந்து 20% தள்ளுபடியில் உடன் தற்போது விற்பனைக்கு இது வந்துள்ளது. இத்துடன் ரூ. 2, 777 என்ற மாத EMI விருப்பத்துடன் விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அமேசான் நிறுவனம் இதற்கு முன்பு ஆர்டர் செய்த வாடிக்கையாளர்கள் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. வெறும் ரூ .5,900 விலைக்கு முன்பதிவு செய்யப்பட்ட பயனர்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை இன்னும் நிறுவனம் வெளிப்படுத்தவில்லை.
பல சிறப்பு அம்சங்களுடன் விற்பனைக்கு கிடைக்கும் ஏசி
இந்த இன்வெர்ட்டர் ஏசி பாக்டீரியா எதிர்ப்பு பூச்சு, டஸ்ட் பில்டர் மற்றும் டி-ஹுமிடிஃபயர் போன்ற சில சிறப்பு அம்சங்களுடன் வருகிறது. இது ஒரு வருடத்தின் விரிவான உத்தரவாதத்தை வழங்கி, பிசிபிக்கள், சென்சார்கள், மோட்டார்கள் மற்றும் மின் பாகங்கள் மீது ஒன்பது ஆண்டுகள் கூடுதல் உத்தரவாதத்துடன் வருகிறது. இந்த கருவி, 105 X 25 X 32 சென்டிமீட்டர் பரிமாணங்களில், 3.3 பருவகால ஆற்றல் திறன் விகிதத்தை (SEER) கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக