
குவால்காம் (Qualcomm) நிறுவனம் 1.6 மில்லியனுக்கும் அதிகமான 'ஸ்னாப்டிராகன் இன்சைடர்ஸை' (Snapdragon Insiders) தன் வசம் வைத்துள்ளது. இது ஆன்லைன் மன்றங்களில் பங்கேற்கும் ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்களின் சமூக நபர்களால் நிறைந்துள்ளது. குவால்காமில் இருந்து வரும் செய்திகளைப் பற்றி முதலில் கேட்டவர்கள் இவர்களாகத் தான் இருப்பார்கள். இந்த பயனர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய, குவால்காம் நிறுவனம் ஒரு தனித்துவமான ஸ்மார்ட்போனை ஆசஸ் (Asus) நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து உருவாக்கவுள்ளது.
குவால்காம் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்னாப்டிராகன் இன்சைடர்ஸ் ஸ்மார்ட்போன்
குவால்காம் நிறுவனம் வெளியிட்டதும் முதல் ஸ்னாப்டிராகன் ஸ்மார்ட்போன் மாடல் இதுவாகும். இதற்கு நிறுவனம் "ஸ்னாப்டிராகன் இன்சைடர்ஸ் ஸ்மார்ட்போன்" என்று பெயரிட்டுள்ளது. 1,500 டாலர் விலையில் ஸ்மார்ட்போனுடன், மாஸ்டர் & டைனமிக் தயாரித்த ஸ்னாப்டிராகன் சவுண்டுடன் ஒரு ஜோடி TWS இயர்பட்ஸ், பம்பர் கேஸ், குவால்காம் பாஸ்ட் சார்ஜ் 5.0 பவர் அடாப்டர் மற்றும் இரண்டு சார்ஜிங் கேபிள்கள் ஆகியவை அடங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் போனின் டிஸ்பிளே
இன்னும் இந்த சாதனத்தைப் பற்றி நிறைய விஷயங்கள் உள்ளன, ஸ்மார்ட்போனின் ஹார்ட்வேரில் இருந்து தொடங்குவோம். முன்பக்கத்தில் பெரிய 6.78' இன்ச் சாம்சங் AMOLED 2448 x 1080 பிக்சல் தெளிவுத்திறன் கொண்டது டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இது 144Hz புதுப்பிப்பு வீதத்தை ஆதரிக்கிறது. கொரில்லா கிளாஸ் விக்டஸால் பாதுகாப்புடன் டிஸ்பிளே உறுதியான மற்றும் மிகத் துல்லியமான சிறந்த காட்சி அனுபவத்தை வழங்குகிறது.
நாட்ச் இல்லாத பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடல்
ஸ்மார்ட்போனின் மேல் பெசல் இடத்தில் 24MP கேமரா உள்ளது. இது சோனி எக்ஸ்பீரியா 1 III மற்றும் 5 III போன்றவற்றுடன் பஞ்ச் ஹோல் நாட்ச் இல்லாமல் வரும் சில பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக வைக்கப்படுகிறது. பின்பக்கத்தில் மூன்று கேமரா அமைப்பு, கைரேகை ஸ்கேனர் மற்றும் ஒரு சுய ஒளிரும் ஸ்னாப்டிராகன் லோகோ உள்ளது. ஸ்மார்ட்போனின் புகைப்படம் அடர் நீல நிறத்தில் மேட் பினிஷ் லுக் உடன் தோற்றமளிக்கிறது.
ஸ்னாப்டிராகன் ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்பு
ஸ்னாப்டிராகன் ஸ்மார்ட்போன் 64 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா, ஒரு அல்ட்ராவைடு 12 மெகா பிக்சல் சென்சார் மற்றும் 3X ஜூம் கொண்ட டெலிஃபோட்டோ 8 மெகா பிக்சல் ஸ்னாப்பர் உள்ளது. கேமரா பயன்பாட்டில் ஆட்டோ ஜூம் மற்றும் AI ஆப்ஜெக்ட் டிராக்கிங் போன்ற குவால்காம் AI மென்பொருள் அனுபவங்கள் இடம்பெறும். குவால்காமின் மிரட்டலான கேமரா அம்சங்களை இதன் மூலம் நாம் காணலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் கேமராக்களின் உண்மையான டியூனிங் ஆசஸ் நிறுவனத்தால் செய்யப்படுகிறது.
ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் அல்லது ஸ்னாப்டிராகன் 888 பிளஸ்
ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் அல்லது ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் சிப்செட் உடன் வெளியாகலாம். 512 ஜிபி யுஎஃப்எஸ் 3.1 சேமிப்பு மற்றும் 16 ஜிபி எல்பிடிடிஆர் 5 ரேம் உள்ளது. ஸ்மார்ட்போன் அண்ட்ராய்டு 11 உடன் வெளியே வரும். அண்ட்ராய்டின் குறிப்பிட்ட உருவாக்கம் குறித்து குவால்காம் கருத்து தெரிவிக்கவில்லை. குவால்காம் பாஸ்ட் சார்ஜ் 5.0 சார்ஜருடன் இணக்கமான 4,000 mAh பேட்டரி உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக