
சமூக வலைதளங்கள் (Social Media) மிகவும் சக்திவாய்ந்த ஊடகங்களாக, சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஊடகங்களாக உள்ள நிலையில், சமூக ஊடக தளங்களில் பதிவிடப்படும் பதிவுகளுக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் குரலாக இருப்பதில் சமூக ஊடகங்கள் மிக முக்கிய பங்கு வகித்தாலும், சில சமயங்களில், வன்முறையை தூண்டும் பதிவுகள், சமூகத்தில் அமைதியை சீர்குலைக்கும் பதிவுகளுக்கான தளமாகவும் அமைந்துவிடுகிறது என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட
வழக்கில், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என பேஸ்புக் இந்தியா (Facebook) நிர்வாக இயக்குநர் அஜித் மோகனுக்கு, டெல்லி சட்டப்பேரவை நல்லிணக்க குழு நோட்டீஸ் அனுப்பியது.
அந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் அஜித்
மோகன் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், நோட்டீஸை ரத்து செய்ய
முடியாது என மறுத்த, உச்ச நீதிமன்றம், 27 கோடி பயனாளர்களை கொண்டுள்ள
பேஸ்புக் நிறுவனம் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியம் என கூறியது.
வழக்கு விசாரணையில், பேஸ்புக் தளத்தில் சமூக நல்லிணக்கம், அமைதியை குலைக்கும் பதிவுகளால் ஏற்படும் பிரச்னைகளுக்கு பேஸ்புக் நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டனர். பிரச்சனையை ஏற்படும், சர்ச்சைக்குரிய பதிவுகள் தொடர்பாக சமூக ஊடக பிரதிநிதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பும் அதிகாரம் டெல்லி சட்டப்பேரவைக்கும் அதன் குழுவுக்கும் உள்ளது என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
பேஸ்புக் தளத்தில் 27 கோடி பயனர்கள் உள்ள நிலையில், பேஸ்புக் நிறுவனம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக