இது சிரிப்பதற்கான நேரம்....!!
-------------------------------------------------
இயக்குநர் : என் படத்துல இதுவரை யாருமே சொல்லாத மெசேஜ் இருக்கு..
உதவி இயக்குநர் : அட போங்க சார்.. என் செல் ஃபோன்ல கூடத்தான் புது மெசேஜ் 12 இருக்கு...
இயக்குநர் : 😖😖
-------------------------------------------------
விமல் : இருமலுக்கு டாக்டர் ஊசி போட்டப்போ லொக்கு லொக்குன்னு இருமுன தாத்தா... நர்ஸ் நமீதா ஊசி போட்டதும் வேற மாதிரி இருமுறாரு..
கமல் : எப்படி?
விமல் : லக்கு லக்குன்னு இருமுறாரு...
கமல் : 😂😂
-------------------------------------------------
இருவழி சொற்கள்...!!
-------------------------------------------------
↔ கைரேகை
↔ மாயமா
↔ மேயுமே
↔ மாறுமா
↔ மேகமே
↔ தாத்தா
↔ வினவி
-------------------------------------------------
ரொம்ப ரோல் ஆகுதே...!!
-------------------------------------------------
😝 தொடை தட்டி சவால் விட்டு, வடை சுட்டுக் கடை போட்டு விற்று, தடை நீங்க விடை கிடைத்து, புடை சூழ குடை பிடித்து நடைபோட்டு போனபோது, பீடை மோத பாடையில் சென்றான்.
😝 வட்டம் பெரிய வட்டம், கட்டம் சிறிய கட்டம். கட்டம் போடுது கொட்டம், வட்டம் போடுது சட்டம். வட்டம் இல்லை கட்டம், கட்டம் இல்லை வட்டம். வட்டம் வட்டம், கட்டம் கட்டம், இது திட்டவட்டம்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக