
ரயில் போக்குவரத்து பொதுமக்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. ரயில் பயணச்சீட்டை அடிக்கடி பார்த்தாலும், அதில் குறிப்பிட்டுள்ள சில குறிச்சொற்களின் பொருள் அனைவருக்கும் தெரியாது. ஆனால் அவை மிகவும் முக்கியமான தகவல்கள்.
உங்கள் ரயில் பயணச்சீட்டு, காத்திருப்பு பட்டியலில் இருந்தால், அது எந்த பிரிவில் இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதை மிக எளிதாக கண்டுபிடிக்கலாம். ரயில் டிக்கெட்டில் எழுதப்பட்டுள்ள குறியீடுகளை யாரும் கவனிப்பதில்லை.
1. பி.என்.ஆர் - பயணிகள் பெயர் பதிவு (PNR (Passenger Name Record))
ஒரு பயணி ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போதெல்லாம், அவருக்கு ஒரு தனிப்பட்ட பிஎன்ஆர் எண்
வழங்கப்படுகிறது. இது டிக்கெட்டின் மேல் இடது பக்கத்தில் உள்ள பெட்டியில்
எழுதப்பட்டுள்ளது. இந்த எண்ணின் உதவியுடன், பதிவு செய்யப்பட்டுள்ள ரயில்
பெட்டி எண், இருக்கை எண் மற்றும் கட்டணத் தகவல் உள்ளிட்ட பயணச்சீட்டு
விவரங்களை அறிந்து கொள்ளலாம். இந்த எண்ணின் உதவியுடன் டிக்கெட் பரிசோதகர்
(Ticket Collector) உங்கள் டிக்கெட் மற்றும் இருக்கை எண்ணை
சரிபார்க்கிறார்.
2. GNWL (பொது காத்திருப்பு பட்டியல்)
டிக்கெட்டில் எழுதப்பட்ட இந்த GNWL என்ற குறியீடு 'பொது காத்திருப்பு
பட்டியல்' என்று பொருள் கொடுக்கிறது. பயணிகள், எந்த ரயில் நிலையத்தில்
இருந்து பயணத்தைத் தொடங்குகின்றனர் என்பது டிக்கெட்டில் எழுதப்பட்டுள்ளது.
இது காத்திருப்பு பட்டியலில் பொதுவான பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.
3. RLWL (Remote Location Waiting List) தொலைநிலை இருப்பிட காத்திருப்பு பட்டியல்
ஒன்றுக்கு மேற்பட்ட ரயில்கள் இல்லாத இரண்டு பெரிய நிலையங்களுக்கு இடையில் இருக்கும் ரயில் நிலையத்திற்கு செல்பவர்களின் டிக்கெட்டில் இந்த எண் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த எண் குறிப்பிடப்பட்டுள்ள டிக்கெட் வைத்துள்ள பயணிகளுக்கு பயணச்சீட்டு ரத்து செய்யப்படும்போது காலியாகும் இருக்கைகளை ஒதுக்கீடு செய்வதில் முன்னுரிமை வழங்கப்படும். உங்கள் டிக்கெட் உறுதியாகாமல் இருந்தால், மற்றவர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்வதைப் பொருத்து உங்களுடைய டிக்கெட் உறுதிப்படுத்தப்படும்.
4. தட்கல் ஒதுக்கீடு காத்திருப்பு பட்டியல் - TQWL (Tatkal Quota Waiting List)
CKWL என்று பெயரிடப்பட்டிருந்த தட்கல் ஒதுக்கீடு காத்திருப்பு பட்டியலின் பெயர் 2016 ஆம் ஆண்டி, TQWL என மாற்றப்பட்டது. இதில், தட்கல் பட்டியலின் டிக்கெட் ரத்து செய்யப்படும்போது உங்கள் டிக்கெட் உறுதிப்படுத்தப்படும். இந்த வகை பயணச்சீட்டுகளில் RAC இருக்காது. இருப்பினும், டிக்கெட் உறுதிப்படுத்தப்படாவிட்டால், டிக்கெட் தானாகவே ரத்துசெய்யப்பட்டு பணம் உங்கள் கணக்கிற்கு வந்து சேரும்.
5. PQWL (பூல் ஒதுக்கீடு காத்திருப்பு பட்டியல்)
சில சிறிய நிலையங்களுக்கு இந்த வகை ஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றன. PQWL (Pool
Quota Waiting List) என்ற காத்திருப்பு பட்டியல் ஒரு பெரிய பகுதியில் உள்ள
பல சிறிய ரயில் நிலையங்களுக்கானது. இந்த காத்திருப்பு பட்டியலில் உள்ள
பயணச்சீட்டு ஏதாவது ரத்து செய்யப்பட்டால் தான் உங்கள் டிக்கெட்
உறுதியாகும். ரயில் புறப்படும் ரயில் நிலையத்திலிருந்து ஒரு சில நிலையங்களுக்கு பயணிக்கும் பயணிகளுக்கு மட்டுமே இந்த டிக்கெட் வழங்கப்படுகிறது.
6. RQWL (கோரிக்கை காத்திருப்பு பட்டியல்)
டிக்கெட்டுகளின் கடைசி காத்திருப்பு பட்டியல் RQWL (Request Waiting List).
ரயிலின் பாதையில் PQWL இல்லை என்றால், இந்த காத்திருப்பு பட்டியல்
உருவாக்கப்படுகிறது. இந்த டிக்கெட்டுகள் உறுதிப்படுத்தப்படுவதற்கான
வாய்ப்புகள் மிகக் குறைவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக