
6 ஆண்டுகளுக்குப் பிறகு, இருவருன் தனுஷின் 44 ஆவது படத்திற்காக மீண்டும் இணைகிறார்கள். தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், 2020 ஆம் ஆண்டில் இந்த படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டது.
தனுஷ் மற்றும் அனிருத்தின் 15 வினாடி வீடியோவை அப்போது தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்தது. ட்விட்டரில் பகிரப்பட்ட அந்த வீடியோவுக்கு ‘தே ஆர் பேக்’ என தலைபிடப் பட்டது.
தனுஷின் '3' படத்தில்தான் அனிருத் இசை அமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. அவரது முதல் தனிப்பாடலான 'வொய் தில் கொலவெறி டி’ பாடல் மக்களிடையே மிகவும் பிரபலமானது. இந்த பாடல் மிக அதிகமாக வைரல் ஆகி, அனைத்து பதிவுகளையும் முறியடித்தது.
இன்றளவிலும், இந்த பாடல், யூடியூப் மற்றும் பிற தளங்களில் மிக அதிகமாக கேட்கப்பட்ட மற்றும் பார்க்கப்பட்ட பாடல்களில் ஒன்றாக உள்ளது.
இப்போது 'D44' பற்றிய பரபரப்பான செய்தி என்னவென்றால், இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் துவங்கும் என்பதுதான். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மூன்று முன்னணி கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். அவர்களுடனான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், எனினும், எந்த தகவல்களும் இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனுஷின் 'யாரடி நீ மோகினி', 'குட்டி' மற்றும் 'உத்தம புத்திரன்' ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய மித்ரன் ஜவஹர் இப்படத்தை இயக்குகிறார்.
'டி 44' படத்தின் மீதமுள்ள நடிகர்கள் மற்றும் படக் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தனுஷ் மற்றும் அனிருத் ஜோடி இப்படம் மூலம் மீண்டும் இணையவுள்ளதால், ரசிகர்கள் இப்படத்திற்காக ஆவலாக காத்திருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக