
இப்போது வரும் புதிய புதிய ஆப் வசதிகள் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ஒரு சில ஆப் வசதிகள் நமது தினசரி வேலைகளை எளிமையாக்குகிறது என்றே கூறலாம். ஆனால் போனில் உள்ள ஆப் வசதிகளை தனித்தனியே ஓபன் செய்து பயன்படுத்தும்போது கொஞ்சம் சிரமம் இருக்கும்.
இந்த சிரமத்தை குறைக்கும் வகையில் பெபல் ஸ்மார்ட்வாட்ச் நிறுவனம் புதிய Beeper செயலியை உருவாக்கியுள்ளது. அதாவது இந்த Beeper செயலியில் டிவிட்டர், பேஸ்புக், மெசஞ்சர், டெலிகிராம், சிக்னல், ஸ்கைப், கூகுள் ஹேங்கவுட்ஸ் உள்ளிட்ட 15 மெசேஜ் செயலிகளை பயன்படுத்தும்படி வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து பேசிய Beeper செயலி நிறுவனர் எரிக் மிமிகோவ்ஸ்கி என்பவர், மெசேஜ் செயலிகளின் HUB-ஆக பீப்பர் செயலி இருக்கும் என்று கூறினார். ஆனால் இந்த Beeper செயலி பயன்படுத்த நினைப்பவர்கள் கவனத்திற்கு, மற்ற செயலிகளை போல் இந்த செயலி இலவசம் இல்லை. ஒவ்வொரு மாதம் 10 டாலரை யூசர்கள் கட்டணமாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிவிட்டர்,
பேஸ்புக், மெசஞ்சர், டெலிகிராம், சிக்னல், ஸ்கைப், கூகுள் ஹேங்கவுட்ஸ்
போன்ற பல்வேறு செயலிகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருவதால், இவற்றின்
நோட்டிபிகேஷன் மற்றும் மெசேஜ்களை படிப்பதில் கொஞ்சம் சிரமம் இருக்கும்.
மேலும் ஒவ்வொரு செயலியையும் தனித்தனியே ஓபன் செய்ய வேண்டியிருப்பதால், பல
செயலிகளை பல நாட்கள் பயன்படுத்த முடியாத
நிலை கூட இருக்கும். எனவே இதனை மனதில் வைத்து தான் Beeper செயலியை உருவாக்கியுள்ளது பெபல் ஸ்மார்ட்வாட்ச்
நிறுவனம்.
பல செயலிகளை இந்த ஒரே Beeper செயலியில் ஆப்ரேட் செய்யும் முடியும் என்பதால் பல்வேறு மக்கள் இதை பதிவிறக்கம் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் எந்த மெசேஜ் செயலியில் நோட்டிபிகேஷன் வந்தாலும், பீப்பர் செயலியில் இருந்தவாறு எளிமையாக பதில் அளிக்கலாம் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் பீப்பர் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின்பு கடந்த சில மாதங்களாக பீப்பர் செயலியின் செயல்பாடு குறித்து வெளியாகமல் இருந்த நிலையில், அதன் நிறுவனர் பீப்பர் செயலியை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.
அனைத்து செயலிகளும் இந்த பீப்பர் தளத்தில் இயங்கும்போது, அதனை பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு, ஐஓடிஸ் பயனர்கள் சில நடைமுறை சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். எனவே வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப புதிய அம்சங்களுடன் பீப்பர் செயலி மேம்படுத்தப்பட்டு வருவதாக பெபல் ஸ்மார்ட்வாட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வாட்ஸ்அப், சின்கல் போன்ற செயலிகளும் இந்த பீப்பர் செயலியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த பீப்பர் செயலியை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக