Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 6 ஜூலை, 2021

அதிரடி நடவடிக்கையில் காவல்துறை- 75 பேர் மீது வழக்குபதிவு, 16 பேர் கைது: சமூகவலைதளத்தில் எல்லைமீறும் பதிவுகள்!

சுயவிளம்பரம் மற்றும் ஆதாயத்திற்கு அவதூறு கருத்துகள் பதிவு

சமூகவலைதளங்கள் என்பது பிரதான பயன்பாடாக மாறி வருகிறது. இதை பயன்படுத்தப்படும் முறைகள் குறித்து பல்வேறு வகையில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பலர் சமூகவலைதளங்களில் புகழடைய ஏணைய முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சுயவிளம்பரம் மற்றும் ஆதாயத்திற்கு அவதூறு கருத்துகள் பதிவு

இதையடுத்து சுயவிளம்பரம் மற்றும் ஆதாயத்திற்கு அவதூறு கருத்துகள் பதிவு செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் நபர்கள் குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் யூடியூபர் உள்ளிட்ட பல சமூகவலைதள பிரபலங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆபாச பேச்சு, அவதூறு கருத்துகள்

சமூகவலைதளங்களில் ஆபாச பேச்சு, அவதூறு கருத்துகள் பதிவிடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. இதுதொடர்பாக தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது. பலர் சமூகவலைதளங்களில் சம்பாதிக்க வேண்டும், பிரபலமடைய வேண்டும் என்ற சுய விளம்பரத்திற்காக பல்வேறு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இதில் எல்லை மீறும் நபர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்கள்

இதுகுறித்து காவல்துறை தலைமை இயக்குனர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்கள் பத்திரிகைகள் மூலமாக பலரும் சமுதாயம், அரசியல் சார்ந்த பல ஆக்கப்பூர்வ தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். இருப்பினும் சிலர் சுயவிளம்பரத்திற்கு சமூகவலைதளங்களில் எல்லைமீறும் அருவருப்பான கருத்துகள் மற்றும் அவதூறு செய்திகள் பதிவிட்டு சட்டஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி வருகின்றனர்.

பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பதிவு

சட்டம் ஒழுங்கிற்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கட்சி, சாதி, மதம் சார்ந்த இருதரப்புகளுக்கு பிரச்சனைகள் தூண்டுவது, பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பதிவு, குற்ற செயல்கள் ஊக்குவிக்கும் வகையில் இருக்கும் பதிவுகளுக்கு காரணம் ஆனவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

75 நபர்கள் மீது வழக்கு பதிவு

இதன்படி இந்தாண்டு மே மாதம் முதல் தற்போது வரை சமூகவலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்ட 75 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் எல்லைமீறிய வகையில் அவதூறு பதிவுகள் பதிவிட்ட 16 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூகவலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துகள் குறித்து புகார் அளிக்கும்பட்சத்தில் அதில் முகாந்திரம் இருக்கும் புகார்கள் மீதுமட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை இணக்க அதிகாரி, நோடர் தொடர்பு நபர்

சமூகவலைதளம் பயனர்கள் குறைகளை கேட்டறியும் அதிகாரி, தலைமை இணக்க அதிகாரி, நோடர் தொடர்பு நபர் ஆகியவர்களை நியமிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. மேலும் சமூகவலைதளங்களில் பல குற்றச் செயல்கள் நடக்கிறது, எனவே பயனர்கள் குற்றங்களை கேட்கும் நேரடி அதிகாரிகள் நியமிக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் விதிக்கப்பட்டது.

தொடரும் புகார்கள்

தனிநபர் கணக்குகள் தனிச்சையாக முடக்குதல், மத ரீதியான அவதூறுகளுக்கு எதிரான நடவடிக்கை, பாலியல் புகார்கள் போன்று தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. மாதத்திற்கு எத்தனை புகார்கள் வந்தன அவற்றில் எத்தனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது போன்றவை தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இதுதொடர்பான விவகாரம் நீடித்து வரும் நிலையில் சமூகவலைதள புகார்கள் மீது மாநில காவல்துறையினர், சைபர் பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக