Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 6 ஜூலை, 2021

போர்டிகோ நிறுவனத்தை கைப்பற்றும் முகேஷ் அம்பானி.. உண்மை என்ன..?!

 ஹோம் பேஷன் பிரிவு

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் தனது எண்ணெய் வர்த்தகத்தைத் தாண்டி தற்போது பல துறையில் வர்த்தகத்தைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருகிறது.

இந்நிலையில் தற்போது பேஷன் பிராண்ட் நிறுவனமான போர்டிகோ நிறுவனத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.

ஈகாமர்ஸ் வர்த்தகம்

ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் வர்த்தகத் துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் இப்பிரிவு வர்த்தகத்தை மேம்படுத்தவும், அதன் மூலம் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற வேண்டும் என்பதற்காகச் சில முக்கியமான திட்டங்களையும், வர்த்தகங்களையும் தொடர்ந்து கைப்பற்றி வருகிறது.

ஹோம் பேஷன் பிரிவு

இதன் ஒரு பகுதியாகத் தற்போது ஹோம் பேஷன் பிரிவில் இந்திய ஈகாமர்ஸ் வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ள போர்டிகோ நிறுவனத்திள் பெருமளவிலான பங்குகளைக் கைப்பற்ற முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் - மில்க்பேஸ்கட்

ஏற்கனவே ரிலையன்ஸ் தனது ரீடைல் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய ஆன்லைன் பால் ஆர்டர் மற்றும் டெலிவரி செய்யும் நிறுவனமான மில்க்பேஸ்கட் நிறுவனத்தைக் கைப்பற்றப் பேச்சுவார்த்தை செய்து வருவதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது புதிதாகப் போர்டிகோ நிறுவனத்தையும் கைப்பற்றத் திட்டமிட்டுள்ளது.

போர்டிகோ பிராண்ட்

கிரியேடிவ் கிரூப் கட்டுப்பாட்டில் இயங்கும் போர்டிகோ பிராண்ட் தற்போது பெட் மற்றும் பாத் பொருட்களைச் சொந்தமாகத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் சந்தையில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளைக் கைப்பற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான் விருப்பம் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் - போர்டிகோ

ரிலையன்ஸ் - போர்டிகோ இடையிலான ஒப்பந்தம் கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக எக்னாமிக் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. மேலும் போர்டிகோ நிறுவனத்தைப் பங்குகள் கைப்பற்றல் மூலம் அலோக் இண்டஸ்ட்ரீஸ் உடன் இணைக்கவும் ரிலையன்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

அலோக் இண்டஸ்ட்ரீஸ்

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் திவாலான டெக்ஸ்டைல் உற்பத்தி நிறுவனமான அலோக் இண்டஸ்ட்ரீஸ்-ஐ ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் - ஜேஎம் பைனான்சியல் அசர்ட் நிறுவனத்துடன் இணைந்து சுமார் 250 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றியது. இந்த நிறுவனத்தின் ரிலையன்ஸ் சுமார் 37.7 சதவீத பங்குகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக