
இதற்கிடையில்
தற்போது பல கடன் பிரச்சனைகளுக்கும் மத்தியிலும் தனது சொத்துக்கு சொத்தாக
இருக்கும் சில வணிக பிரிவுகளை விற்க முயற்சி செய்து வருகின்றது. நாட்டின்
மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா, பல நெருக்கடியான
நிலைகளை தாண்டி தற்போது தான் சற்றே துளிர் விடத் தொடங்கியுள்ளது எனலாம்.
இதற்கிடையில் இந்த நிறுவனம் தனது செயல்பாட்டினை மேம்படுத்த நிதியினை திரட்ட
திட்டமிட்டு வருகின்றது.
இது தவிர நிதி நெருக்கடியினை சமாளிக்க பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. சமீபத்தில் தனது வொடபோன் ஐடியா என்னும் தனது பெயரினை கூட வீ (Vi) என மாற்றிக் கொண்டது.
இதற்கிடையில் தற்போது பல கடன் பிரச்சனைகளுக்கும் மத்தியிலும் தனது சொத்துக்கு சொத்தாக இருக்கும் சில வணிக பிரிவுகளை விற்க முயற்சி செய்து வருகின்றது.
சொத்து விற்பனை
இது குறித்து வெளியான செய்தியில் இந்த நிறுவனம் தனது பிராண்ட் பேன்ட் துறை நிறுவனமான ஆஃப்டிக் ஃபைபர் பிரிவு மற்றும் மூன்று தரவு மைய வணிகங்களை விற்பனை செய்வதன் மூலம் 1 பில்லியன் டாலர், அதாவது சுமார் 7400 கோடி ரூபாயினை நிதியினை திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
கடன் பிரச்சனை
இதன் மூலம் தனது நிதி நெருக்கடியினை ஓரளவு சமாளிக்க முடியும் என இந்த நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிறுவனம் கடன் சந்தை மற்றும் பங்கு மூலமான 25,000 கோடி ரூபாய் நிதியினை திரட்ட முயற்சி செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. பல முதலீட்டாளர்களுடன் வோடபோன் நிறுவனம், இது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் சமீப காலமாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.
ஏஜிஆர் நிலுவை
வோடபோன் நிறுவனம் ஏஜிஆர் நிலுவை தொகையாக டிசம்பர் 2021 முதல் ஏப்ரல் 2022 வரையில் 22,500 கோடி ரூபாய் நிதியினை செலுத்த வேண்டும். கடந்த மார்ச் காலாண்டில் இந்த நிறுவனம் ரொக்க இருப்பு வெறும் 350 கோடி ரூபாய் மட்டுமே உள்ளதாகவும், இதே காலாண்டில் 6985.1 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் கருத்து
இதே பார்தி ஏர்டெல்லின் தலைவர் சுனில் மிட்டல், சமீபத்திய அறிக்கையில் தொலைத் தொடர்பு துறையானது மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளது. ஆக கட்டணங்களை அதிகரிக்க வேண்டும். இதற்கு ஏர்டெல் ஒரு போதும் தயங்காது. தொலைத் தொடர்பு துறையில் சிக்கல் இருக்கிறது. இதனால் நாங்கள் சரியவில்லை. மிக வலுவாக இருக்கிறோம் என்றும் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.
ஜியோவின் வருகை
ஜியோவின் வருகைக்கு பிறகு பல நிறுவனங்களும் நஷ்டத்தினை கண்டுள்ளன. குறிப்பாக பல நிறுவனங்கள் சந்தையை விட்டே காணாமல் போயுள்ளன. இருக்கும் சில நிறுவனங்களுக்கும் மோசமான கடன் பிரச்சனைகளுக்கு நடுவில் சிக்கியுள்ளன. இப்படி இருக்கும் நிலையில் கடனை அடைக்க நிறுவனங்கள் சொத்தினை விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக