டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், நியூராலிங்க், போரிங் கம்பெனி என நிறுவனங்களுக்குச் சொந்தக்காரரான எலான் மஸ்க் தனது கார் தயாரிப்பை அதிகப்படுத்த இந்தியாவில் தொழிற்சாலை துவங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் சீனாவில் வர்த்தகத்தைத் துவங்கினார்.
இந்நிலையில் எலான் மஸ்க் தலைமை வகிக்கும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் அதிவேக இண்டர்நெட் சேவையான ஸ்டார்லிங்க் சேவைக்குப் பயன்படுத்தும் கருவிகளை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளார் எலான் மஸ்க்.
எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ்எக்ஸ்
எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் அதிவேக செயற்கைக்கோள் வாயிலாக இண்டர்நெட் சேவை அளிக்கும் ஸ்டார்லிங்க் திட்டத்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய அனைத்து விதமான அனுமதிகள் பெற்று வரப்படுகிறது. ஏற்கனவே டெலிகாம் துறை ஸ்டார்லிங்க் திட்டத்திற்கு முதற்கட்ட அனுமதியை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது
ஸ்டார்லிங்க் சேவை
இந்நிலையில் இந்தியாவில் அடுத்த வருடம் ஸ்டார்லிங்க் சேவையை அறிமுகம் செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டு உள்ளார். மேலும் ஸ்டார்லிங்க் சேவை பெறத் தேவையான செயற்கைக்கோள் தொடர்புகொள்ளும் கருவி, ஆண்டெனா, யூசர் டர்மினல் கருவி ஆகியவற்றை இந்தியாவிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கூட்டணி வைக்கும் ஸ்பேஸ்எக்ஸ்
இதற்காக எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இந்தியாவில் இருக்கும் ஒரு நிறுவனத்துடன் கூட்டணி வைத்துப் பொருட்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது. ஸ்டார்லிங் கருவிகளைத் தயாரிக்க இந்திய நிறுவனங்கள் உடன் பணியாற்றுவது மிகவும் ஆர்வமாக உள்ளது என ஸ்டார்லிங்க் திட்டத்தின் தலைவர் மேட் போட்வின் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் - இந்தியா
டெஸ்லா நிறுவனத்தின் நேரடி விற்பனையை இந்தியாவில் துவங்கியுள்ள எலான் மஸ்க் தற்போது ஸ்டார்லிங்க் சேவையை இந்தியாவிற்கு விரிவாக்கம் செய்வது மட்டும் அல்லாமல் உற்பத்தி பணிகளிலும் ஈடுபட முடிவு செய்துள்ளார்.
3 நிறுவனங்கள் ஆர்வம்
இந்தியாவில் தற்போது செயற்கைக்கோள் வாயிலாக இண்டர்நெட் சேவை அளிக்க எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ்எக்ஸ் மட்டும் அல்லாமல் பார்தி குழுமம் முதலீட்டில் இயங்கும் ஓன்வெப், ஜெப் பைசோஸ் முதலீட்டில் இயங்கும் அமேசானின் Kuiper ஆகிய 3 நிறுவனம் இந்தியாவில் சேவையைத் துவங்கத் திட்டமிட்டுள்ளது.
இந்திய டெலிகாம் துறை
இதேவேளையில் செயற்கைக்கோள் தொடர்புகொள்ளும் கருவியை தயாரிக்கும் வர்த்தகத்தை இந்தியாவில் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யவும், இத்தகைய சேவைக்கான கட்டுப்பாட்டு ஆணையத்தை உருவாக்கும் பொருட்டு ஓன்வெப், VIASAT, Hughes, ஏர்டெல், ஜியோ, வோடாபோன் ஐடியா, டிராஸ் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறை ஆகியோரிடம் டெலிகாம் துறை ஆலோசனை நடத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக