Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 14 ஜூலை, 2021

WhatsApp-ல் மறைமுகமாக வீணாய் போகும் Mobile Data; உடனே இதை ON பண்ணுங்க!

 

தினமும் எக்ஸ்ட்ராவா டேட்டா பேக் போடும் தேவை உங்களுக்கு உள்ளதென்றால்... உங்களுக்கே தெரியாமல் எதோ ஒரு வழியாக உங்கள் மொபைல் டேட்டா வீணாய் போகிறது என்று தான் அர்த்தம். இப்படியாக மொபைல் டேட்டா வீணாய் கரைய ஒரு ஸ்மார்ட்போனில் பல வழிகள் உள்ளன. அதில் ஒரு முக்கியான ஓட்டை... வாட்ஸ்அப்பில் உள்ளது. வாருங்கள் அதை கண்டுபிடித்து அடைப்போம்.

 

கொரோனா வைரஸ் தொற்றுநோய் நம்மில் பெரும்பாலோரை வீட்டிலிருந்தே வேலை செய்யச் செய்துள்ளது, வீட்டில் இருந்தபடியே அன்பிற்கு உரியவர்களிடம் பேசிப்பழக வைத்துள்ளது.

அதாவது மிகவும் அத்தியாவசியமான வேலைகளுக்கு மட்டுமே நாம் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இது WFH பாணியிலான வேலைக்காக மட்டுமின்றி நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதற்கும் இண்டர்நெட்டை பெரிதும் நம்பியிருப்பதை அதிகரித்துள்ளது.

COVID-19 க்கு பிந்தைய New Normal-இல் "நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பது" என்றால் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் என்று பொருள்.

அதிக அளவிலான அழைப்புகள் என்றால் அதிக டேட்டா நுகர்வு - ஆக பெரிய டேட்டா நன்மைளை வழங்கும் ரீசார்ஜ் என்றால் அதிக செலவு - அப்படித்தானே!

ஒருவேளை நீங்கள் மணிக்கணக்கில் வாட்ஸ்அப் வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகளை செய்யும் பழக்கம் கொண்டவர் என்றால் நீங்கள் தவறாமல் தெரிந்த வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு வாட்ஸ்அப் ரகசியம் உள்ளது. அது அழைப்புகளின் போது டேட்டா நுகர்வை குறைக்க உதவுகிறது.

அதென்ன ரகசியம்? அதை செயல்படுத்துவது எப்படி? என்பதற்காக எளிய வழிமுறைகள் இதோ:

முன்நிபந்தனைகள்:

நீங்கள் வாட்ஸ்அப்பின் சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பித்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
அதவது Android-இல் 2.21.12.21 வெர்ஷன் இருக்க வேண்டும். iOS-இல் 2.21.130.15 வெர்ஷன் இருக்க வேண்டும்.

இதை செயல்படுத்துவது எப்படி?

1. இப்போது உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப்பைத் திறக்கவும்.

2. ஆப்பின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று செங்குத்தான புள்ளிகளை கிளிக் செய்யவும், பின்னர் செட்டிங்ஸ் விருப்பத்திற்குள் நுழையவும்.

3. அங்கே Storage and Data என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்

4. அங்கே Use less data for calls என்கிற Toggle டீபால்ட் ஆக டிஸேபிள் ஆகி இருக்கும், அதை Enable செய்யவும், அவ்வளவுதான்!

பின் குறிப்பு: iOS பயனர்களும் மேற்குறிப்பிட்ட அதே வழிமுறைகளைப் பின்பற்றவும், ஆனால் நீங்கள் நேரடியாக ஐபோனில் உள்ள வாட்ஸ்அப்பின் ஹோம் ஸ்க்ரீன் வழியாக செட்டிங்ஸ்ற்குச் செல்லலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக