-------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
-------------------------------------
ஒரு முட்டாள் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தான். அவருக்கு தூக்கம் தூக்கமாக வந்தது. தான் இறங்க வேண்டிய இடம் இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்து விடும் என்பதால் தூங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
திடீரென்று ஒரு யோசனை வந்தது, அருகில் உட்கார்ந்திருந்த ஒருவரிடம், தன்னை குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிடும்படியும், அதற்கு இருபது ரூபாய் தருவதாகவும் சொன்னார்.
அருகே இருந்த அந்த ஆள் அதற்கு ஒத்துக்கொண்டு, பணத்தையும் வாங்கிக் கொண்டார். முட்டாள் நன்கு தூங்க தொடங்கினான். அவனை எழுப்பி விடுவதாக சொன்ன நபருக்கு, ஒரு ஆளை எழுப்பி விடுவதற்கு, இருபது ரூபாய் வாங்குவது அவருக்கு கஷ்டமாக இருந்தது.
தான் வாங்கிய பணத்துக்கு மேலும் உபயோகமாக வேறு ஏதாவது அவருக்கு செய்ய வேண்டும் என நினைத்தார். தான் ஒரு பார்பர் (முடி திருத்துபவர்) என்பதால், முட்டாள் தூங்கிக் கொண்டிருக்கும் போது, அவருக்கு ஷேவ் செய்துவிட்டு (தாடியையும் எடுத்து விட்டார்), அவர் இறங்கக்கூடிய இடம் வந்ததும் எழுப்பியும் விட்டார்.
இதை எதையும் அறியாத முட்டாள் நேரே வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு, தன்னை கண்ணாடியில் பார்த்த போது அதிர்ச்சி அடைந்தான். தன் மனைவியை அழைத்து சொன்னான், 'ரயிலில் அந்த மடையன் என்னை எழுப்பி விடுவதற்கு பதிலாக வேறு யாரையே எழுப்பிவிட்டு விட்டான்" என்று...😂😂
-------------------------------------
நான்கு விஷயங்களை குறை!
-------------------------------------
💥 உணவு
💥 தூக்கம்
💥 சோம்பல்
💥 பேச்சு
-------------------------------------
புதுமொழி.... இது எப்படி இருக்கு?
-------------------------------------
👉 எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்...
👉 ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும்...
👉 ஒரு பொய்க்கு ஒரு மூட்டை பொய் பாலம்...
👉 ஓடும் குதிரை ஓட்டத்தில் தெரியும்...
👉 கார் ஓட டயரும் தேயும்...
👉 சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு...
👉 சைக்கிளுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை...
👉 தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்...
👉 தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்...
👉 துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பெரியது...
👉 பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல...
👉 மிதிக்க மிதிக்க சைக்கிளும் நகரும்...
👉 முடியுள்ள போதே சீவிக்கொள்...
👉 பழகின செருப்பு காலை கடிக்காது...
👉 மாத நாட்காட்டிக்கு ஒருமுறை கிழி தினநாட்காட்டிக்கு தினம்தினம் கிழி...
👉 ஹெல்மெட் இல்லாதவன் பின்னே எமன் வருவான் முன்னே...!!
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக