Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 20 ஜூலை, 2021

இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்க கூடிய ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்திய ரஷ்யா

மேலும் 1000 கி.மீ வரை

ரஷ்யா தொடர்ந்து அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது என்றே கூறலாம். அதன்படி ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லக்கூடிய சிர்கான் எனும் அதிநவீன ஹைபர்சோனிக் ஏவுகணையை ரஷ்யா தயார் செய்துள்ளது.

மேலும் 1000 கி.மீ வரை சென்று இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்க கூடிய வல்லமை கொண்ட இந்த ஏவுகணையை ரஷ்யா
நேற்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. வெளிவந்த தகவலின் அடிப்படையில், நேற்று காலை ரஷ்ய ஆர்க்டிக்கில் உள்ள வெள்ளை கடலில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அட்மிரல் கோர்ஷ்கோவ் போர் கப்பலில் இருந்து ஏவப்பட்ட சிர்கான் ஏவுகணை ஆனது 350கி.மீ வரை சென்று அதன் இலக்கை தாக்கியதாக ரஷ்ய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் மேற்கத்திய நாடுகளுக்கும், ரஷ்யாவிற்கும் இடையே தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. எனவே தான் ரஷ்யா புதியதலைமுறை ஆயுதங்களை அதிக அளவில் மேம்படுத்தி வருகிறது.

அதிலும் இந்த எதிர்கால ஹைபர்சோனிக் என்று அழைக்கப்படும் ஒலியை விட வேகமாக செல்லக்கூடிய ஏவுகணைகள் முக்கிய பங்காற்றும் என ரஷ்யா கூறி வருகிறது.

குறிப்பாக எந்தவொரு நாட்டின் தாக்குதலையும் சமாளிக்கும் அளவிலான ஆயுத பலம், ஆயுத வளரச்சி மற்றும் ஆயுத தயாரிப்புகளை தன்வசம் கொண்டுள்ள ரஷ்யா, அதன் பாதுகாப்பை பாதுகாப்பை மென்மேலும் உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புகிறது.

அதேபோல் மற்ற நாடுகளை விட ரஷ்யா அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது. பின்பு ரஷ்யாவின் அனைத்து தயாரிப்புகளுக்கும் மற்ற நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி ரஷ்ய அதிபர் புதின் அவர்களின் பிறந்தநாளின் போது ஒரு அதிநவீன சிர்கான் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. அப்போது புதின் தெரிவித்தது என்னவென்றால் சிர்கானின் சோதனை வெற்றி எங்கள் ராணுவப்படைகளின்வாழ்க்கையில் மட்டுமல்ல ரஷ்யா முழுவதிலும் ஒரு பெரிய நிகழ்வு என்று கூறி இருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக