Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 20 ஜூலை, 2021

இலவச ஆன்லைன் யோகா வகுப்பில் இணைவது எப்படி?- எளிய வழிமுறைகள்

 வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தல்

கொரோனா கோரத்தாண்டவும் உலகின் அன்றாட செயல்பாடுகளை மாற்றி அமைத்தது என்றே கூறலாம். உச்சத்தில் இருந்தவர்களும் வேலையிழந்து சிரமத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டது. தொற்று பரவலை தடுக்கு பள்ளி, கல்லூரிகள் மூடுவதற்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டது.

வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தல்

அதேபோல் பல்வேறு அலுவலகங்களும் மூடும் நிலை ஏற்பட்டது. மேலும் சில அலுவலகங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தி வருகின்றனர். பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டிலேயே தேங்கும் நிலை உட்பட பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் ஏற்படும் நிலை உருவானது. இந்த மன அழுத்தத்தை குறைக்க ஆன்லைன் மூலமாக 3 நாட்களுக்கு இலவச யோக வகுப்பு நடத்தப்படுவதாக ஈஷா அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈஷா வெளியிட்ட அறிக்கை

இதுகுறித்து ஈஷா வெளியிட்ட அறிக்கையில், கொரோனா தொற்று பரவும் இந்த சவாலான சமயத்தில் உயிர் நோக்கம் என்ற யோகா வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் வகுப்பானது ஜூலை 23 ஆம் தேதிமுதல் ஜூலை 25 ஆம் தேதி வரை நடத்தப்பட இருக்கிறது. இது முற்றிலும் இலவசம் ஆகும். 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ளலாம்.

காலை, மதியம், மாலை என்ற மூன்று சமயத்தில் வகுப்பு

இந்த வகுப்பானது காலை, மதியம், மாலை என்ற மூன்று சமயத்தில் நடக்கிறது. இது தினசரி 2 மணிநேரம் நடக்கிறது. இதில் பயனர்கள் தங்கள் விருப்பப்பட்ட நேரத்தில் கலந்து கொள்ளலாம். மேலும் இந்த யோகா பயிற்சியில் கலந்து கொள்வதன் மூலம் முதுகுத்தண்டு வலுப்பெறும், மூட்டு வலி, மன அழுத்தும் உள்ளிட்டவைகளில் இருந்து விடுபடலாம். ஈஷா.கோ என்ற வலைதளத்தை அணுகலாம். இதுதொடர்பான சந்தேகத்திற்கு 7383673836 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

மன அழுத்தம் குறைவதோடு, உடல்நலமும் ஆரோக்கியம்

பலரும் தங்களது நாட்டத்தை யோகா பக்கம் செலுத்தி வருகின்றனர். காரணம் யோகா மூலமாக மன அழுத்தம் குறைவதோடு, உடல்நலமும் ஆரோக்கியம் அடைகிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சிதான் யோகாக் கலை மற்றும் யோகாசனம் என கூறப்படுகிறது. அழுத்தங்களை குறைத்து அமைதி பெறுவதற்கு இந்த முறைகள் வழிவகுக்கிறது.

ஆன்லைன் மூலம் யோகா வகுப்பு

ஆன்லைன் மூலம் யோகா வகுப்பு நடத்தப்பட்டாலும் இதை சுத்தமான காற்றோட்டம் நிறைந்த இடத்தில் மேற்கொள்வது அவசியம். அதிகாலை யோகா என்பது கூடுதல் நன்மையாகும். அல்லது மாலை சூரியன் மறையும் நேரத்திலும் யோகா பயிற்சி மேற்கொள்ளலாம். யோகாசனங்களை வரிசையாக வழிமுறைகளோடு மேற்கொள்ளுதல் வேண்டும். முறையாக பயிற்சி பெற்று யோகா மேற்கொள்வது அவசியம் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக