செவ்வாய், 20 ஜூலை, 2021

உடல் உறுப்புகளை இப்படித்தான் பாதுகாக்கணும்😜... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

 -------------------------------------------

சிரிக்கலாம் வாங்க....!!
-------------------------------------------

வாணி : உடல் உறுப்புகளைப் பாதுகாக்குறதுல என் கணவருக்கு நிகர் அவரே தான்.
ராணி : எப்படி?
வாணி : தேஞ்சு போயிரும்னு சொல்லி பல்லே தேய்க்க மாட்டாருன்னா பாத்துக்கோயேன்.
ராணி : 😂😂
-------------------------------------------
ராணி : உங்க வீட்டு டி.வி.ல ராத்திரி பத்துமணி நியூஸ் வரும்போது டி.வி.ல படம் ஏன் சின்னதா தெரியுது.
வேணி : அது செய்திச் சுருக்கம் தானே அதான் அப்படித் தெரியுது!
ராணி : 😜😜
------------------------------------------- 
படித்ததில் பிடித்தது.!!
------------------------------------------- 
✏ ரப்பரைப் பார்த்து பென்சில் சொல்கிறது. ஒவ்வொரு முறை நான் செய்யும் தவறுக்கும், என்னை சுத்தப்படுத்தி தூய்மையாக்கி விடுகிறாய். ஆனால் என்னை சுத்தம் செய்யும் போது நீ தேய்ந்துக் கொண்டே போகிறாயே, அது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று.

✏ ரப்பர் அதற்கு, அது என் கடமை, நான் படைக்கப்பட்டதே அதற்குத் தான். என்னைக் கண்டு நீ வருந்த வேண்டாம். இதில் எனக்கு முழு மகிழ்ச்சி. என்னால் உன் தவறுகள் அழிக்கப்பட்டு, நீ திருத்தங்களுடன் முன்னேறி சென்றால் அதுவே என் வெற்றி. நான் தேய்வதைப் பற்றி எனக்கு கவலை இல்லை என்றது.

✏ அந்த ரப்பர் வேறு யாருமில்லை. நம் பெற்றோர்கள் தான். அவர்கள் ஆயுள் முடியும் வரை நம் தவறுகளை திருத்திக் கொண்டே இருக்கும் ரப்பர்கள்.. நம் மீது பொறாமைப்படாத இரு உள்ளங்கள் நம் பெற்றோர்கள்..

------------------------------------------- ..
வேடிக்கைக்காக மட்டுமே !!
------------------------------------------- 
😇 தபால்காரரும், பால்காரரும் ஒன்றுக்குள் ஒன்றானவர்கள் எப்படி? - தபால் என்ற வார்த்தைக்குள் பால் இருக்குதே!

😇 செய்தி வாசிப்பவர் திணறித் திணறி செய்தி வாசித்தார், ஏன்? - அவர் வாசித்தது முக்கிய செய்திகள்!!

😇 உலகத்தையே மாற்றப்போகிறேன் என்று சபதம் எடுத்தவன், ஒரு நொடியில் மாற்றிவிட்டான் எப்படி? - தன் வீட்டில் இருந்த உலக உருண்டையை மாற்றி, புதிதாக வாங்கி வைத்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்