
நாட்கள் செல்லச் செல்ல, வாட்ஸ்அப் என்பது மேலும் மேலும் வளர்ந்து நிற்கும் ஒரு முக்கிய போட்டி நிரூபணமாகி வருகிறது. எந்தவொரு மெசேஜிங் பயன்பாடும் வாட்ஸ்அப்பின் புகழ் நிலைக்கு வரமுடியவில்லை என்றாலும் கூட, இந்த பயன்பாட்டுடன் போட்டியிடப் பல நிறுவனங்கள் பல புதிய அம்சங்களை தங்களின் தளங்களில் அறிமுகம் செய்து வருகிறது. அதிகரித்து வரும் போட்டியைக் கருத்தில் கொண்டு, வாட்ஸ்அப் வேறு பயன்பாடுகளில் கிடைக்கக்கூடிய சில அம்சங்களைத் தனது தளத்தில் புதுமைப்படுத்தவும் மேம்படுத்தவும் முயன்று வருகிறது.
வாட்ஸ்அப்பை இப்போது வங்கிகள் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தலாமா?
சமீபத்திய நிகழ்வுகளின் போது, வாட்ஸ்அப்பை இப்போது வங்கிகள் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தலாம் என்பது போன்ற தகவல் வெளியாகியுள்ளது. வங்கிகளுக்கு வெளியிடப்பட்ட ஒரு புதிய அறிவிப்பில், எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல்கள் மூலமாகப் பரிவர்த்தனைகள் மற்றும் பிற நடவடிக்கைகள் குறித்து கணக்கு வைத்திருப்பவர்களுக்குத் தகவல்களை அனுப்பவதை தவிர்த்து, அதற்குப் பதிலாக வாட்ஸ்அப்பை பயன்படுத்துவது சிறந்ததாக இருக்குமென்று ஊடக வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் முக்கிய கவனம் ஓய்வூதியம் பெரும் பயனர்களின் மீது உள்ளது
ஆனால், அரசாங்கத்தின் முக்கிய கவனம் என்னவோ, ஓய்வூதியம் பெரும் பயனர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதில் வாட்ஸ்அப் பெரிதும் உதவும் என்று நம்பப்படுகிறது. வருமான வரி செலுத்துதல், ரிட்டர்ன் தாக்கல் செய்தல், EPFO மற்றும் பிற வேலை போன்ற பல்வேறு தேவைகளுக்கு ஏற்ற தங்கள் ஓய்வூதிய பிரிவுகளின் தகவல்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எஸ்எம்எஸ் மற்றும் ஈமெயில் உடன் ஒப்பிடும் போது வாட்ஸ்அப் சிறந்ததா?
எனவே, இந்த தகவலைத் தெரிவிக்கச் சிறந்த தளமாக வாட்ஸ்அப் தெரிகிறது. மின்னஞ்சல் அல்லது எஸ்எம்எஸ் உடன் ஒப்பிடும்போது வாட்ஸ்அப் பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்படுவதால், பயனர்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து தகவலையும் உடனடியாகப் பெற்று மதிப்பாய்வு செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இது நடந்தால், பயனர்கள் நிறையத் தொந்தரவுகளிலிருந்து காப்பாற்றப்படுவார்கள், அவர்கள் ஓய்வூதிய விவரங்களைப் பெறுவதற்கு ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் போதுமானது.
ஓய்வூதிய மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலத்துறையிலிருந்து வெளிவந்த தகவல்
இந்த தகவல் ஓய்வூதிய மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலத்துறையிலிருந்து வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப் தொடர்ந்து பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. வாட்ஸ்அப் அதன் வெப் மற்றும் மொபைல் பயன்பாடு இரண்டிலும் இன்னும் சில மேம்பாடுகளைச் செய்துள்ளது. வாட்ஸ்அப்பின் பயனர்கள் இப்போது தங்கள் தொலைப்பேசியை எல்லா நேரங்களிலும் இணைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் வாட்ஸ்அப் வெப் அம்சத்தைப் பயன்படுத்த முடியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக