இந்நிலையில்
வோடபோன் ஐடியா நிறுவனம் தனது ஆறு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு ரூ.40
தள்ளுபடி வழங்கி அசத்தியுள்ளது என்றே கூறலாம்.மேலும் இது சார்ந்த தகவலை
சற்று விரிவாகப் பார்ப்போம்.
வோடபோன்
ஐடியா நிறுவனத்தின் எல்லா திட்டங்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படவில்லை.
குறிப்பிட்ட ஆறு திட்டங்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி ரூ.399, ரூ.449, ரூ.699, ரூ.801, ரூ. 401, மற்றும் ரூ.1,197
திட்டங்களுக்கு மட்டுமே 40 ரூபாய் தள்ளுபடி
வழங்கப்பட்டுள்ளது.
புதிய ரீசார்ஜ் திட்டம்
- வோடபோன் ஐடியாவின் ரூ.399 திட்டமானது இனிமேல் ரூ.359-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.
- வோடபோன் ஐடியாவின் ரூ.449 திட்டமானது இனிமேல் ரூ.409-க்கு ரீசாரஜ் செய்ய கிடைக்கும்.
- வோடபோன் ஐடியாவின் ரூ.699 திட்டமானது இனிமேல் ரூ.659-க்கு ரீசாரஜ் செய்ய கிடைக்கும்.
- வோடபோன் ஐடியாவின் ரூ.801 திட்டமானது இனிமேல் ரூ.761-க்கு ரீசாரஜ் செய்ய கிடைக்கும்.
- வோடபோன் ஐடியாவின் ரூ.401 திட்டமானது இனிமேல் ரூ.361-க்கு ரீசாரஜ் செய்ய கிடைக்கும்.
- வோடபோன் ஐடியாவின் ரூ.1197 திட்டமானது இனிமேல் ரூ.1157-க்கு ரீசாரஜ் செய்ய கிடைக்கும்.
இந்த
புதிய விலைகள் ஏற்கனவே நிறுவனத்தின் ஆப் பயன்பாடு மற்றும் நிறுவனத்தின்
இணையத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த திட்டங்கள்
மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம். ஆனால் இந்த சலுகை
அனைவருக்கும் கிடைக்காமல் போகலாம் என்று டெலிகாம் டால்க் வலைத்தளம்
வெளியிட்டுள்ளது. அதாவது வோடபோன் ஐடியா நிறுவனம் இந்த சலுகையை ARPU
வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கலாம் அல்லது பயனர்களின் கடந்த கால
ரீசார்ஜ் பரிவர்த்தனையின் அடிப்படையில் இந்த 40 ரூபாய் தள்ளுபடி வவுச்சர்
வழங்கப்படலாம என்று கூறப்பட்டுள்ளது.
வோடபோன் ஐடியா ரூ.359 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன்
ஐடியா ரூ.359 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி
1.5ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ், வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி
மற்றும் பல்வேறு சிறப்பு நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின்
வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.வோடபோன் ஐடியா ரூ.409 ப்ரீபெய்ட் திட்டம் வோடபோன்
ஐடியா ரூ.409 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி
4ஜிபி டேட்டா, Binge All night, வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதிமற்றும்
பல்வேறு சிறப்பு நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின்
வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.வோடபோன் ஐடியா ரூ.659 ப்ரீபெய்ட் திட்டம் வோடபோன்
ஐடியா ரூ.659 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி
4ஜிபி டேட்டா, Binge All night, வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதிமற்றும்
பல்வேறு சிறப்பு நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின்
வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.வோடபோன் ஐடியா ரூ.761 ப்ரீபெய்ட் திட்டம் வோடபோன்
ஐடியா ரூ.761 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி
4ஜிபி டேட்டா, வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி மற்றும் பல்வேறு சிறப்பு
நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள்
ஆகும்.வோடபோன்
ஐடியா ரூ.361 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது ஒரு வருடத்திற்கு டிஸ்னி +
ஹாட்ஸ்டாருக்கான அணுகலை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி
டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள் கிடைக்கும். மேலும் இதன் வேலிடிட்டி 28
நாட்கள் ஆகும். கடைசியாக, ரூ. 1,157-திட்டம் ஆனது ஜீ 5 அணுகல், Binge All
night, வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி, Vi மூவிஸ் & டிவி சந்தா
நன்மைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 180 நாட்கள்
ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக