Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 17 ஜூலை, 2021

ITR Filing ALERT: வரி செலுத்துவோருக்கு இனி சிக்கல் இல்லை!

ITR Filing ALERT: வரி செலுத்துவோருக்கு இனி சிக்கல் இல்லை!

நாடு முழுவதும் வரி செலுத்துவோருக்கு ஒரு நல்ல செய்தி! இந்திய அஞ்சல் துறை இப்போது வரி செலுத்துவோருக்கு எளிதான தீர்வை வழங்கி வருகிறது. அதாவது தபால் நிலையத்தின் பொது சேவை மையங்களில் (Common Services Centres) கவுண்டர்களில் வருமான வரி வருமானத்தை (ITR) செலுத்தலாம் என அறிவித்துள்ளது. 

வரி செலுத்துவோர்கள் உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தின் சி.எஸ்.சி கவுண்டரில் ஐ.டி.ஆர் சேவைகளை குறித்து தெரிந்துக்கொள்ள அணுகலாம் என்று இந்தியா போஸ்ட் (India Post) ட்வீட் செய்துள்ளது. 

இந்திய அஞ்சல் துறையின் ட்விட்டர் பக்கத்தில், "இப்போது வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய அதிக தூரம் செல்ல வேண்டிய அவசியமில்லை. உங்கள் அருகிலுள்ள தபால் நிலைய சி.எஸ்.சி கவுண்டரில் (Post office CSC counter) வருமான வரி வருமான சேவைகளை நீங்கள் எளிதாகப் பெறலாம்." எனத் தெரிவித்துள்ளது. 

அஞ்சல் துறையின் பொது சேவை மையங்களின் கவுண்டர் இந்த G2C சேவைகளான ர். பிரதான் மந்திரி தெருவோர விற்பனையாளர்கள் ஆத்மனிர்பர் நிதி யோஜனா (பிரதமர் ஸ்வநிதி யோஜனா), ஆயுஷ்மான் பாரத், பிரதமரின் கிஸான் மன் தன் யோஜனா, மின் சேவைகள், பான் கார்டு, பாஸ்போர்ட் சேவைகள், வாக்காளர் அட்டை மற்றும் ஃபசல் பிமா யோஜனா (Fasal Bima Yojana) உட்பட பல திட்டங்களில் இணைத்துக்கொள்ளவும், அதன் பயனை பெறவும் அஞ்சல் துறை மூலம் மேற்கொள்ளலாம்.

அதேபோல மின்சாரம் பில், கேஸ் பில், தண்ணீர்பில், ஆயுள் மற்றும் பொது காப்பீட்டிற்கான பிரீமியம் வசூல், ஈ.எம்.ஐ சேகரிப்பு மற்றும் விமானங்கள், ரயில்கள் மற்றும் பேருந்துகளுக்கான பயண சேவை டிக்கெட்டுக்கள் போன்ற இந்த B2C சேவைகளை தபால் நிலையத்தின் பொது சேவை மையங்கள் வழங்கி வருகிறது. 

 

Citizen-Centric Services கீழ் குடிமக்களுக்கு தேவையான அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அஞ்சல் துறை (டிஓபி) மற்றும் பொது சேவை மையம் (சிஎஸ்சி) மின்-ஆளுமை சேவைகள் இந்தியா ஆகியவற்றுடன் தபால் அலுவலகங்களை இணைத்து, நாட்டின் கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் உள்ள குடிமக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்க வேண்டும் என ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் டிஜிட்டல் சமூகத்தை உருவாக்குவதே நோக்கமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக