Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 17 ஜூலை, 2021

Ola-Uber ஓட்டுநர்கள் சவாரியை ரத்து செய்தால் புகாரளிப்பது எப்படி?

Ola-Uber ஓட்டுநர்கள் சவாரியை ரத்து செய்தால் புகாரளிப்பது எப்படி?

தற்போது போக்குவரத்து பல பரிணாமங்களை எடுத்துள்ளது. ஒரு காலத்தில் பொது போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து மட்டுமே இருந்தது. தற்போது, ஆட்டோ, டாக்ஸிகளைத் தவிர ஓலா உபெர் போன்ற சேவை நிறுவனங்களும் போக்குவரத்து வசதியை அளிக்கின்றன.

ஓலா, உபெர் போன்ற நிறுவனங்களின் வாகனம், தனியார் வாகனமாக இருந்தாலும், நம்முடைய சொந்த வாகனம் போல வசதியாக செல்லலாம், நெரிசலும் இருக்காது என்பதால், இதுபோன்ற போக்குவரத்து சேவைகள் மிகவும் பிரபலமாகிவிட்டன.

அதிலும் கொரோனா பெருந்தொற்று தொடங்கிய காலத்தில் இருந்து பேருந்து போன்ற பொதுபோக்குவரத்தை மக்கள் தவிர்க்க விரும்பும் நிலையில், சொந்தமாக வாகனம் இல்லாதவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது ஓலா, உபெர் போன்ற சேவை நிறுவனங்கள்.

சொந்த வாகனம் வாங்க வேண்டும் என்ற விருப்பத்தையும் தள்ளிப் போட செய்திருக்கும் அளவுக்கு இந்த தனியார் நிறுவன போக்குவரத்து சேவைகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சொந்தமாக வாகனம் வாங்குவதற்கான செலவு, பராமரிப்பு செலவு, எரிபொருள் செலவு, வாகனங்களை நிறுத்துவதற்கான இடம் என பல சொந்த வாகனத்திற்கான செலவை ஒப்பிட்டுப் பார்த்து பலரும் இந்த சேவைகளை பயன்படுத்துவதே லாபம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.

எனவே நாட்டின் பெரிய நகரங்களில், இப்போது ஓலா மற்றும் உபெர் சேவைகளுக்கான தேவைகள் துரிதகதியில் அதிகரித்துள்ளன. டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நாட்டின் பெருநகரங்கள் உட்பட பல சிறிய நகரங்களிலும் இப்போது ஓலா மற்றும் உபெர் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

ஆனால் சமீபத்தில், OLA மற்றும் Uber இன் ஓட்டுநர்களால் பல முறை சவாரிகளை ரத்து செய்த வழக்குகள் உள்ளன. சமீபத்திய சில நாட்களில், OLA மற்றும் Uber இன் ஓட்டுநர்கள், வாடிக்கையாளர்களை அழைத்து செல்லும் இடத்திற்கு வந்ததும், எந்தவொரு சரியான காரணத்தையும் தெரிவிக்காமல் தானாகவே சவாரியை ரத்து செய்வதாக கூறப்படுகிறது. 

இத்தகைய சூழ்நிலையில், வாடிக்கையாளர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இதுபோன்ற சங்கடம் ஏற்பட்டால், வாடிக்கையாளர் புகார் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. நீங்களும் இதுபோன்ற ஒரு சிக்கலைச் சந்தித்திருந்தால், அவர்கள் மீது எங்கு புகார் செய்வது எப்படி என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

புகார் செய்வது எப்படி?

 
ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வதற்கான பயணத்தை OLA மற்றும் Uber எளிதாக்கியுள்ளன. OLA மற்றும் Uber இல் பயணம் செய்யும் போது நீங்கள் ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், சவாரி முடிந்ததும் நீங்கள் சவாரி மற்றும் ஓட்டுநரைப் பற்றி மதிப்பாய்வு செய்து உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். 

இதற்கு நீங்கள் அந்த நிறுவனங்களின் வலைதளங்களுக்கு சென்று உங்கள் புகாரை பதிவு செய்யலாம்.ஓலாவிற்கான புகாரை பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்    

உபெர் நிறுவன வாகன ஓட்டுநர்கள் தொடர்பான புகாரை பதிவு செய்ய உபெர் வலைதளமான இங்கு கிளிக் செய்யவும்.

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக