Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 7 ஜூலை, 2021

கூகுள் க்ரோம் புதுப்பிப்பில் சிக்கலா?- அப்டேட் செய்யலாமா?

க்ரோம் ஓஎஸ் பதிப்பு

கடந்த வாரம் கூகுள் புதிய க்ரோம் ஓஎஸ் புதுப்பிப்பை வெளியிட்டது. இந்த பதிப்பானது நிலையான பதிப்பு என தெரிவிக்கப்பட்டதால் இதில் எதுவும் பிரச்சனை இருக்காது என கருதப்பட்டது. இருப்பினும் பல பயனர்கள் இந்த புதிய பதிப்பிற்கு எதிராக கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். புதிய புதுப்பித்தலில் மிக அடிப்படை சிக்கல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை ஆண்ட்ராய்டு போலீஸ் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

க்ரோம் ஓஎஸ் பதிப்பு

க்ரோம் ஓஎஸ் பதிப்பு 91.0.4472.147 குறித்து தற்போது பேசு பொருளாக மாறி வருகிறது. இந்த புதுப்பித்தலுக்கு பிறகு க்ரோம்புக் அதன் செயல்திறனில் கடுமையான சிக்கலை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. க்ரோம் உலாவியில் பல டேப்களை திறப்பதில் மற்றும் பயன்பாடுகளை பயன்படுத்துவது குறித்து புகார் அளிக்கவில்லை. ஆனால் அடிப்படையான விஷயங்களை மேற்கொள்வதில் சிக்கல் வருவதாக கூறப்படுகிறது.

பயன்பாடுகளை திறப்பது போன்ற அடிப்படை விஷயங்கள்

பல பயனர்கள் அளித்த புகார் குறித்து பார்க்கையில், டைப் செய்தல், பயன்பாடுகளை திறப்பது போன்ற அடிப்படை விஷயங்களில் சிக்கலை சந்திப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில் பயன்பாட்டை பயன்படுத்தும் போது 100% வரை சிபியூ பயன்பாடு பதிவாகியுள்ளது. புதிய க்ரோம்-ன் சிக்கல் அதிக சிபியூ பயன்பாட்டுடன் தொடர்புடையது என கூறப்படுகிறது. அதேசமயத்தில் சாதாரண சிபியூ பயன்பாட்டில் மிகமெதுவாக செயல்படுவதாக கூறப்படுகிறது.

செயல்திறன் சிக்கல்கள் எதுவும் இல்லை

மேலும் இந்த சிக்கலால் அனைத்து க்ரோம்புக் செயல்பாடுகளும் பாதிக்கப்படுவதில்லை. க்ரோம் ஓஎஸ் பதிப்பு 91.0.4472.147 புதுப்பிக்கப்பட்ட பிறகு செயல்திறன் சிக்கல்கள் எதுவும் இல்லை என சில பயனர்கள் தெரிவிக்கின்றனர். கிராண்ட் மற்றும் ஹேட்ச் போர்ட்கள் உள்ள சாதனங்களில் மட்டும் இந்த சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.

பிரபலமடைந்த உலாவியான க்ரோம்

உலகின் பெரும்பாலான இண்டர்நெட் பயனாளிகள் உபயோகிக்கும் பிரெளசர் கூகுள் க்ரோம் என்பது அனைவரும் அறிந்ததே. பயன்படுத்துவதற்கு எளிதாக உள்ள இந்த பிரெளசரை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். மிக எளிமையானது என்பதும், இண்டர்நெட்டிற்கு புதியவர்களுக்கும் புரியும் வகையில் இருப்பதாலும் கூகுள் க்ரோம் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்த பிரெளசரில் பலர் அறிந்திராத வசதிகள் இருப்பதை தற்போது பார்ப்போம். மிக எளிமையாக உபயோகிக்க கூடிய இந்த பிரெளசரில் உள்ள ஒருசில டிரிக்ஸ்களையும் பயன்படுத்தினால் இன்னும் சிறப்பானதாக இருக்கும்

க்ரோம் ஷார்ட்கட்

கூகுள் க்ரோமை ஒவ்வொரு முறையும் ஓப்பன் செய்யும் நமக்கு வரும் முதல் பக்கம் எதுவாக இருக்க வேண்டும் என்பதை செட்டிங் செய்து வைத்து கொள்ளும் வசதி இந்த க்ரோமில் உள்ளது. இதற்காக நீங்கள் க்ரோம் செட்டிங் சென்று startup section என்பதன் டிராப்டவுனில் உள்ள ஏதாவது ஒரு ஆப்சனை உங்கள் விருப்பம் போல் தேர்வு செய்யலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக