
ஜெஃப் பெசோஸ் என்று கூறியதும் நினைவுக்கு வருவது அமேசான் நிறுவனம்தான். ஜெஃப் பெசோஸ் அடுத்தடுத்த இலக்கோடு அவரது விண்வெளி தொடர்பான ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அமேசான் நிறுவனம் 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக உருவெடுத்துள்ளது. 1994 ஆம் ஆண்டு ஜெப் பெசோஸ் அமேசான் தளத்தை புத்தகம் விற்பனை மையமாகவே தொடங்கினார்.
பொறுப்பில் இருந்து விலகும் ஜெப் பெசோஸ்
இந்தநிலைியல் அமேசான் தலைமை செயல் அதிகாரியான ஜெஃப் பெசோஸ், தனது பொறுப்பில் இருந்து விலகுகிறார். அதேபோல் பெசோஸ் இடத்துக்கு அமேசான் வெப் சர்வீசஸ் சிஇஓ ஆன்டி ஜெஸி பதிவிக்கு வருகிறார். அமேசான் வெப் சர்வீசை தொடங்கி கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் கிளவுட் பிளாட்பார்மாக உருவாக்கியவர் தற்போது புதிய சிஇஓ-வாக பொறுப்பேற்கும் ஆன்டி ஜெஸிதான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1997 ஆம் ஆண்டு அமேசானில் சேர்ந்தார்.
ஏணைய ஆற்றலும் ஆர்வமும் இருக்கு
தனக்கு ஏணைய ஆற்றல் இருக்கிறது. டே ஒன் ஃபண்ட், தி பெசாஸ் எர்த் ஃபண்ட் போன்ற சில விஷயங்களில் ஈடுபட வேண்டிய நேரம் இது. ஓய்வு பெறுவதற்கான அறிவிப்பு இது இல்லை எனவும் நிர்வாக தலைவராக அமேசானில் தொடர்ந்து அங்கம் வகிப்பேன் எனவும் ஜெப் பெசோஸ் குறிப்பிட்டார். இதையடுத்து ஜெப் பெசோஸ் உலக நாடுகளின் அடுத்த இலக்காக இருக்கும் விண்வெளி குறித்த முன்னேற்றத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் என கூறப்படுகிறது. இது அவரது நிறுவனமான ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் மூலமாகவே செயல்படுத்துவார் என கணிக்கப்படுகிறது.
நிர்வாக தலைவர், மிகப்பெரிய பங்குதாரர்
57 வயதான பெசோஸ் திங்களன்று அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி பதிவியில் இருந்து விலகினார். இருப்பினும் அவர் நிர்வாக தலைவராகவும், நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராகவும் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது நேரத்தை செலவழிக்க பல ஆர்வங்கள் அவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
பதவியேற்கும் ஆண்டி ஜெஸி
விண்வெளியில் சுற்றுலா மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்த தனது நிறுவனமான ப்ளூ ஆர்ஜின் நிறுவன வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிப்பார் என கூறப்படுகிறது. இதன் புதிய சகாப்தமாக ஜூலை 20 ஆம் தேதி விண்வெளி பயனத்தை தனது சகோதரருடன் மேற்கொள்ள இருக்கிறார். தற்போது பதவியேற்கும் ஆண்டி ஜெஸி, அமேசான் வெப் சர்வீசை தொடங்கி கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் கிளவுட் பிளாட்பார்மாக உருவாக்கியவர். அமேசான் சிஇஓ-வாக பொறுப்பேற்றுள்ள இவர் தற்போது இந்த தளத்தையும் பல கட்டத்திற்கு முன்னேற்றுவார் என கூறப்படுகிறது.
ப்ளூ ஆர்ஜின் நிறுவனரான ஜெஃப் பெசோஸ்
ப்ளூ ஆர்ஜின் நிறுவனரான ஜெஃப் பெசோஸ், தனக்கு ஐந்து வயதில் இருந்தே விண்வெளிக்கு பயணிக்க வேண்டும் என கனவு கண்டதாக குறிப்பிட்டார். ஜெஃப் பெசோஸ் அடுத்த மாதம் விண்வெளிக்கு பறக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இவரது அவரது சகோததர் மார்க்கும் செல்கிறார். இந்த பயணம் ஜூன் 20 ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகள் மேலே செலவழிக்கும் நான்கு நிமிடங்கள் உட்பட 10 நிமிடங்கள் பயணம் நீடிக்கும்.
புதிய ஷெப்பர்ட் ராக்கெட்
கர்மன் கோட்டிற்கு மேலே நான்கு நிமிடங்கள் செலவழிக்க இருக்கின்றனர். கர்மன் கோடு என்பது பூமியின் வளிமண்டலத்திற்கும் விண்வெளிக்கும் இடையில் அங்கீகரிக்கப்பட்ட எல்லையை குறிக்கிறது. புதிய ஷெப்பர்ட் ராக்கெட் மற்றும் காப்ஸ்யூல் காம்போ ஆறு பயணிகளுடன் பூமியில் இருந்து 62 மைல்-க்கு மேலாக பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக