
பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. புதிய ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ. 447 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் எந்தவொரு டேட்டா கட்டுப்பாடும் இல்லாமல் பொழுதுபோக்கு சேவைகளுடன் வருகிறது. இந்த பேக் பி.எஸ்.என்.எல் ட்யூன்களுக்கான அணுகலையும் வழங்குகிறது. இந்த புதிய திட்டம், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனம் அறிமுகப்படுத்திய ரூ.447 திட்டத்திற்குப் பின்னர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
BSNL வழங்கும் 100ஜிபி டேட்டா
இந்த திட்டம் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன்-ஐடியாவின் 60 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.447 திட்டத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து வெளிவந்துள்ளது. எனவே, இந்த பிஎஸ்என்எல் திட்டத்துடன் மற்ற டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் திட்டங்களின் நன்மைகளை ஒப்பிட்டுப் பார்த்து, இதில் எந்த திட்டம் ஒரே விலை பிரிவின் கீழ் அதிக நன்மையை வழங்குகிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
புதிய BSNL ரூ. 447 ப்ரீபெய்ட் திட்டம்
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ. 447 ஆகும். இந்த திட்டம் பயனர்களுக்கு 100 ஜிபி டேட்டாவை எந்த வரம்பும் இல்லாமல் வழங்குகிறது. இத்துடன் தினமும் 100 SMS, பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் மற்றும் ஈரோஸ் நவ் பயன்பாட்டிற்கான 60 நாட்கள் சந்தா போன்றவற்றை இந்த திட்டம் வழங்குகிறது. இத்துடன் நிறுவனம் 30 நாட்களுக்கு 50 ஜிபி தரவை வழங்கும் ரூ. 247 திட்டம் மற்றும் 500 ஜிபி தரவை வழங்கும் ரூ. 1,999 ஆகிய திட்டங்களையும் வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 447 திட்டம்
இதேபோல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன்-ஐடியா ரூ. 447 விலையில் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 447 திட்டம் 50 ஜிபி டேட்டா நன்மை, வரம்பற்ற அழைப்பு, தினமும் 100 SMS மற்றும் JioTV, JioCinema, JioNews, JioSecurity மற்றும் JioCloud போன்ற அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்கான சந்தாவை வழங்குகிறது.
வோடபோன்-ஐடியாவின் ரூ. 447 திட்டம்
அதேபோல், வோடபோன்-ஐடியாவின் ரூ. 447 திட்டம் பயனர்களுக்கு 50 ஜிபி டேட்டா நன்மையை, வரம்பற்ற அழைப்பு நன்மையுடன் வழங்குகிறது. இதிலும் உங்களுக்குத் தினமும் 100 SMS மற்றும் வி மூவிஸ் & டிவி கிளாசிக் ஆகியவற்றை 60 நாட்களுக்கு அணுக அனுமதி வழங்குகிறது. பொழுதுபோக்கு அம்சத்திற்காக Vi நிறுவனம் வி மூவிஸ் & டிவி கிளாசிக் சேவையை தனது பயனர்களுக்கு வழங்குகிறது.
ஏர்டெல் ரூ. 456 திட்டம்
ஆனால் இந்த பேக் பிஎஸ்என்எல், வி மற்றும் ரிலையன்ஸ் ஜியோ திட்டத்திற்கு எதிராக அமைந்திருக்கிறது. காரணம் இதன் விலை ரூ. 456 ஆகும். இந்த திட்டம் 50 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, தினமும் 100 SMS, அமேசான் பிரைமின் மொபைல் பதிப்பு, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் அணுகல், இலவச ஹலோ ட்யூன்கள், அப்பல்லோ 24 | 7 வட்டத்திற்கு மூன்று மாத அணுகல், விங்க் மியூசிக் இலவச சந்தா, ஷா அகாடமியின் சந்தா மற்றும் ஃபாஸ்டேக் கேஷ்பேக் நன்மை போன்றவற்றைத் தருகிறது.
அதிக தரவு எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இது தான் கரெக்ட் சாய்ஸ்
இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு ஆபரேட்டர் ஏர்டெல் ரூ. 456 திட்டம் அதிக நன்மைகளை வழங்குகிறது. இருப்பினும், பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் திட்டம் ரூ. 447 விலையில் இதே வேலிடிட்டியுடன் 100 ஜிபி தரவை வழங்கும். அதிக தரவு நன்மைகளை BSNL அனுப்புகிறது மற்றும் அதிக தரவு வசதிகளை எதிர்பார்க்கும் பயனர்களுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக