Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 20 ஜூலை, 2021

BSNL: தினமும் 5ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் கால்.. 100 SMS கிடைக்கும் ஒரே திட்டம்.. விலையோ இவ்வளவு தான்..

ஒரே விலையில் கிடைக்கும் BSNL மற்றும் Jio திட்டம் பற்றி பார்க்கலாம்

டெலிகாம் ஆபரேட்டர் நிறுவனமான BSNL தனது சந்தாதாரர்களுக்கான புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. BSNL தற்போது அறிமுகம் செய்துள்ள இத்திட்டம் ரூ. 599 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டம் நாளை முதல் பயனர்களின் அணுகளுக்கு கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒரே விலையில் கிடைக்கும் BSNL மற்றும் Jio திட்டம் பற்றி பார்க்கலாம்

இந்த திட்டத்தில் என்ன-என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதுடன், ஜியோ இதே விலையில் என்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம். ஒரே விலையில் கிடைக்கும் இரண்டு திட்டங்களில் எந்த திட்டம் சிறந்த நன்மையை தனது பயனர்களுக்கு வழங்குகிறது என்று தெரிந்துகொள்ளலாம். இத்துடன் BSNL அறிமுகம் செய்த தினசரி வரம்பற்ற டேட்டா திட்டம் பற்றியும் பார்க்கலாம்.

BSNL அறிமுகம் செய்துள்ள ரூ .599 புதிய திட்டம்

BSNL அறிமுகம் செய்துள்ள இந்த ரூ .599 புதிய திட்டத்தின் கீழ், பிஎஸ்என்எல் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும்வரம்பற்ற குரல் அழைப்பு வசதியை வழங்குகிறது. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மை மற்றும் தினமும் 5 ஜிபி டேட்டா நன்மையையும் வழங்குகிறது. பிஎஸ்என்எல் சந்தாதாரர்களுக்கு இலவசபிஎஸ்என்எல் ட்யூன்ஸ் நன்மை மற்றும் ஜிங் மியூசிக் அப்ளிகேஷனின் இலவச சந்தாவும் கிடைக்கிறது.

84 நாட்களுக்கு மொத்தம் 420 ஜிபி டேட்டா விலையோ வெறும் 599 ரூபாய் மட்டுமே

மேற்கூறிய நன்மைகளுடன், BSNL நிறுவனம் இந்த திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் பயனர்களுக்கு தினமும் இரவில் வரம்பற்ற டேட்டா நன்மையையும் கூடுதலாக வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. BSNL நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இந்த புதிய ரூ. 599 திட்டமானது 84 நாட்கள் வேலிடிட்டி உடன் கிடைக்கிறது. இந்த புதிய ரூ.599 திட்டம் வரும் ஜூலை 21,2021 (நாளை) முதல் பயனர்களுக்கு ரீசார்ஜ் செய்யக் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 599 திட்டம் என்ன நமையை தருகிறது?

BSNL வழங்கும் இந்த திட்டத்திற்கு எதிராக ரிலையன்ஸ் ஜியோவிலும் இதே விலையில் ஒரு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் பயனர்களுக்கு இப்போது கிடைக்கிறது. BSNL திட்டத்தைப் போல் அல்லாமல், ஜியோவின் ரூ.599 திட்டமானது பயனர்களுக்கு தினமும் வெறும் 2ஜிபி டேட்டா நன்மையை மட்டுமே வழங்குகிறது. இது தவிர அன்லிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 SMS போன்ற அம்ஸங்களுடன் 84 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் இது வருகிறது. இத்துடன் ஜியோவின் கூடுதல் ஜியோ ஆப்ஸ் நன்மையும் கிடைக்கிறது.

டேட்டா வரம்பே இல்லாமல் கம்மி விலையில் ஒரு சிறந்த திட்டம் வேண்டுமா?

இந்த மாத தொடக்கத்தில், BSNL நிறுவனம் ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டம் ரூ. 447 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சிறப்பு ப்ரீபெய்ட் திட்டமாகும். இந்த திட்டம் பயனர்களுக்குத் தினசரி டேட்டா வரம்பு எதுவும் இல்லாமல் டேட்டா நன்மையை வழங்குகிறது.

60 நாட்களுக்கு செல்லுபடியாகும் 100 ஜிபி டேட்டா

சரியாக சொன்னால், இந்த திட்டம் 60 நாட்களுக்கு செல்லுபடியாகும் 100 ஜிபி டேட்டாவை தினசரி வரம்பு இல்லாமல் வழங்குகிறது. இதற்கான பொருள், இந்த 100 ஜிபி டேட்டாவை பயனர் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இரண்டு திட்டங்களையும் ஒப்பிட்டு பார்க்கையில் 599 விலையில் BSNL மட்டுமே தனது பயனர்களுக்கு அதிகப்படியான நன்மையை வழங்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக