Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 20 ஜூலை, 2021

Demat account: டிமேட் கணக்கை எவ்வாறு மூடுவது தெரியுமா?

Is Demat Account Required For Intraday Trading? - MarketExpress

டிமேட் கணக்கை மூடுவது என்பது மிகவும் சுலபமானது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தேவையான சில ஆவணங்களை சேகரித்து வங்கி கிளையில் சமர்ப்பிக்கவும், உங்கள் கணக்கு 7-10 நாட்களுக்குள் மூடப்படும்.

பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்ய, பிரத்யேகமான ஒரு கணக்கு தேவை, இந்த கணக்கு டிமேட் கணக்கு (Demat A/c) என்று அழைக்கப்படுகிறது. டிமேட் கணக்கை பராமரிக்க ஒவ்வொரு ஆண்டும் கட்டணம் செலுத்த வேண்டும். நீங்கள் பங்குச் சந்தையில் இயங்காவிட்டால், உங்களிடம் உள்ள டிமேட் கணக்கை மூடலாம். 

இதைச் செய்யாவிட்டால், அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். பலருக்கு இதைப் பற்றி தெரிவதில்லை. வங்கியில் இருப்பது போல இதுவும் ஒரு கணக்கு தானே என்று நினைத்து அசட்டையாக இருந்துவிடுகிறார்கள். பயன்படுத்தப்படாமல் இருந்தால் அந்த டிமேட் கணக்கை மூடிவிடுவது நல்லது. 

டிமேட் கணக்கை (Demat account) எப்படி மூடுவது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள உதவிக் குறிப்புகளுடன் உங்கள் டிமேட் கணக்கை (Demat account) எளிதாக மூடலாம்.

டிமாட்டை மூடுவது எப்படி?
முதலில் கணக்கு மூடல் படிவத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்யவும். இதற்குப் பிறகு, அந்த படிவத்தை டெபாசிட்டரி பங்கேற்பாளர் (Depository Participant) அதிகாரியின் முன் கையொப்பமிடுங்கள். ஒரு தரகு நிறுவனம் அல்லது வங்கி ஒரு Depository Participant என்ற நிலையில் செயல்படுகிறது.  

டிமாட் கணக்கை மூடும்போது தேவைப்படும் ஆவணங்கள் என்ன?
உங்கள் ஐடி அல்லது டிபியின் ஐடி
KYC விவரங்கள், பெயர் மற்றும் முகவரி போன்ற தகவல்கள் மற்றும் டிமேட் கணக்கை மூடுவதற்கான காரணத்தை பூர்த்தி செய்யவும். உங்கள் அடையாள எண்ணை வங்கி அதிகாரி சரிபார்ப்பார்.  

உங்கள் அருகிலுள்ள வங்கி கிளைக்கு சென்று இந்த ஆவணங்கள் அனைத்தையும் கொடுத்து கணக்கை மூடலாம். உங்கள் டிமேட் கணக்கில் உங்களிடம் இருப்பு இருக்கும்போது, உங்கள் கணக்கை மூட விரும்பினால், அதற்கும் ஒரு சிறிய நடைமுறை உள்ளது.

டிமாட் கணக்கு என்றால் என்ன என்பதை சற்று விரிவாக தெரிந்துக் கொள்ள விருப்பமா?

நாம் முதலீடு செய்யும் பங்குகள் மற்றும் பத்திரங்கள் ஆவணங்களாக இருப்பதற்கு பதிலாக மின்னணு முறையில் ஒரு டிமடீரியல் செய்யப்பட்ட கணக்கில் அல்லது டிமேட் கணக்கில் வைக்கப்படுகின்றன. 1996 ஆம் ஆண்டில், பங்குச் சந்தையால் டிமடீரியலைசேஷன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பங்குச் சான்றிதழ்களை டிஜிட்டல் பத்திரங்களாக மாற்றுவதை உள்ளடக்கிய செயல்முறை இது.

இந்த மின்னணு பத்திரங்கள் பின்னர் முதலீட்டாளர்களின் டிமேட் கணக்கில் வரவு வைக்கப்படும். எளிமையாகச் சொன்னால், டிமாட் கணக்கு என்பது ஒரு வகையான வங்கிக் கணக்கு, இது உங்கள் எல்லா பங்குகளையும் டிஜிட்டல் அல்லது டிமடீரியல் செய்யப்பட்ட வடிவத்தில் வைத்திருக்கிறது.

ஒரு வங்கிக் கணக்கைப் போலவே, இது உங்கள் நிதி முதலீடுகளுக்கான பங்குகள் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் வைத்திருக்கிறது, பத்திரங்கள்,பரஸ்பர நிதி,பரிவர்த்தனை வர்த்தக நிதி மற்றும் அரசு பத்திரங்கள் என பலவும் டிமாட் கணக்கில் வைக்கப்படலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக