
Book an Uber or Ola Cab Without the App: இந்த காலத்தில் நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்ல ஓலா, ஊபர் வண்டிகள் நமக்கு மிகவும் உதவுகின்றன. இவை சொந்தமாக கார் இல்லாதவர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாய் அமைந்துள்ளன.
ஓலா (Ola), ஊபர் வண்டிகளை புக் செய்ய, நாம் நமது மொபைல் போனில் ஓலா, ஊபர் செயலியை திறந்து கேபை புக் செய்கிறோம். ஆனால், நீங்கள் உங்கள் அலுவலகத்தில் உங்கள் கணினிக்கு முன் அமர்ந்திருக்கிறீர்கள் என்றால், நீங்கள் வண்டியை புக் செய்ய உங்கள் மொபைலை வெளியே எடுக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. வெப் பிரவுசரைப் பயன்படுத்தி உங்கள் கணினியிலிருந்து வண்டியை முன்பதிவு செய்யலாம். இது ஒரு மிக எளிதான செயல்முறையாகும்.
மேலும் ஓலா அதிகாரப்பூர்வமாக டெஸ்க்டாப் முன்பதிவை ஆதரிக்கிறது. ஆனால் ஊபரைப் பொறுத்தவரை, நீங்கள் ஒரு சிறிய ட்ரிக்கை பயன்படுத்தி டெஸ்க்டாப்பில் புக் செய்யலாம். இதை எவ்வாறு செய்வது என இந்த பதிவில் காணலாம்:
தொலைபேசி செயலி இல்லாமல் ஊபர் (Uber)வண்டியை எவ்வாறு புக் செய்வது?
தொலைபேசி செயலி இல்லாமல் ஊபரில் வண்டியை புக் செய்வது மிகவும் எளிமையான செயல்முறைதான். ஆனால் டெஸ்க்டாப்பில் வண்டி புக் செய்வதற்கான வசதி ஊபரில் இல்லை என்பதால், இதற்கான ஒரு வழிமுறையை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும். இதற்கு நீங்கள் மொபைல் வலைத்தளத்தைப் பயன்படுத்த வேண்டும். இதை செய்வது எப்படி என்று இங்கே காணலாம்:
1. உங்கள் கணினியில், பிரவுசரைத் திறந்து m.uber.com க்குச் செல்லவும்.
2. திரையில், உங்கள் தொலைபேசி எண்ணையும் பின்னர் உங்கள் கடவுச்சொல்லையும் வழங்குமாறு கேட்கப்படுவீர்கள்.
3. அதன்பிறகு, உங்கள் தொலைபேசியில் OTP ஐப் பெறுவீர்கள். அதை உள்ளிட்டு, முன்பதிவு பக்கத்திற்குச் செல்லலாம். அதன் பிறகு, அடுத்த முறை நீங்கள் முன்பதிவு செய்யும்போது, தேவையான விவரங்கள் உங்களிடம் கேட்கப்படாது.
4. நீங்கள் சைன் இன் செய்ததும், பயன்பாட்டு இருப்பிட சேவையைப் பற்றி உங்களிடம் கேட்கப்படும். அதை இயக்கிய பிறகு, முன்பதிவுக்கான திரை வரும்.
5. இங்கே, உங்களது பிக்-அப் மற்றும் டிராப் இடத்தை உள்ளிடவும்.
6. அதன் பிறகு நீங்கள் கீழே உள்ள வரைபடத்தைக் காண்பீர்கள். அங்கு உங்களுக்கு வண்டிக்கான விருப்பங்கள், கட்டணம் மற்றும் பிக்-அப் நேரம் ஆகியவை தெரிவிக்கப்படும். அதைத் தேர்ந்தெடுத்த பிறகு, ’ரெக்வஸ்ட் பொத்தானை’ கிளிக் செய்யவும்.
7. அதன் பிறகு ஊபர் உங்கள் வண்டியை முன்பதிவு செய்யும்.
தொலைபேசி செயலி இல்லாமல் ஓலா வண்டிக்கான புக்கிங் செய்வது எப்படி?
1. உங்கள் கணினியில், பிரவுசரைத் திறந்து www.olacabs.com ஐப் பார்வையிடவும்.
2. இடதுபுறத்தில் உள்ள பெட்டியில், உங்கள் பிக்-அப் மற்றும் டிராப் இடத்தை பதிவிட்டு, கேப் தேவைப்படும் நேரத்தையும் உள்ளிடவும்.
3. பின்னர் ’search cabs'-ல் கிளிக் செய்யவும்.
4. நீங்கள் கார்களின் (Cars) பட்டியலைப் பெறுவீர்கள். விலைகள் மற்றும் பிக்-அப் நேரங்களையும் காண்பிப்பீர்கள். இவற்றில் உங்களுக்கு மிகவும் பொருத்தமான ஒன்றை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
5. பேமெண்ட் ஆப்ஷனில் கேஷ் பேமெண்ட் காண்பிக்கப்படும். உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும்.
6. உங்கள் தொலைபேசியில் ஒரு OTP ஐப் பெறுவீர்கள், அதை நீங்கள் இங்கே உள்ளிட வேண்டும்.
7. அதன் பிறகு உங்கள் வண்டி புக் செய்யப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக