Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 7 ஜூலை, 2021

மீண்டும் சாட்டை எடுக்கும் சீன அரசு.. அலிபாபா-வை தொடர்ந்து #Didi நிறுவனம்..!

சீனாவின் மிகப்பெரிய ஆன்லைன் டாக்ஸி நிறுவனமான Didi, சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுச் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்த நிலையில், இந்நிறுவனத்திற்கு வர்த்தகத் தடை விதித்துள்ளது சீன அரசு

சீன அரசு சமீப காலமாகவே டெக் நிறுவனங்கள் மீது அதிகளவிலான கட்டுப்பாடுகளை விதித்துத் தனது அதிகாரத்திற்குக் கீழ் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. 

இதன் வாயிலாகக் கடந்த ஒரு வருடமாக அலிபாபா நிறுவனத்தை நெருக்கி வரும் நிலையில் தற்போது ஆன்லைன் டாக்ஸி நிறுவனமான Didi-ஐ நெருக்கத் துவங்கியுள்ளது.

Didi நிறுவனம் 

ஐபிஓ வெளியிட்ட மகிழ்ச்சியில் இருந்த Didi நிறுவனத்திற்கு நேற்று சீன கட்டுப்பாட்டு அமைப்புப் புதிதாக வாடிக்கையாளர்களைச் சேர்க்கக் கூட்டது, புதிதாக எந்த ஆர்டரையும் செயல்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. 

இதுமட்டும் அல்லாமல் சீன ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட Didi செயலி சீன அரசின் சைபர்செக்யூரிட்டி மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.

 சீன அரசு அதிரடி 

Didi நிறுவனத்திற்கு எதிராகச் சீன அரசு எடுத்துள்ள நடவடிக்கையின் குறித்துக் கூறுகையில், தகவல் பாதுகாப்பு மற்றும் மக்களின் விருப்பத்தைப் பாதுகாக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

அலிபாபா நிறுவனத்திற்கு எதிரான சீன அரசு பல்வேறு நடவடிக்கைகள் சீனாவில் மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் அதிகளவில் விவாதிக்கப்பட்டது. 

சீனாவின் சைபர்ஸ்பேஸ் 

மேலும் சீனாவின் சைபர்ஸ்பேஸ் வாட்ச்டாக் அமைப்பு Didi நிறுவனம் முறையற்ற வகையில் வாடிக்கையாளர்களின் தனிநபர் தரவுகளைத் திருடி வருவதாகச் சந்தேகப்படுகிறது. 

இந்தத் தரவுகளை வைத்து வாடிக்கையாளர்களின் பழக்கம் வழக்கத்தைப் பிக் டேட்டா அனாலிசிஸ் செய்து நிறுவனத்திற்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது. 

 4 நிறுவனங்கள் மீது தடை 

சீனாவின் சைபர்ஸ்பேஸ் அமைப்புத் திங்கட்கிழமை Didi நிறுவனத்தின் மீது மட்டும் அல்லாமல் டிரக் லாஜிஸ்டிக்ஸ் தளமான Huochebang மற்றும் Yunmanman, ஆன்லைன் வேலைவாய்ப்பு தளமான Boss Zhipin ஆகிய நிறுவனத்தின் மீதும் இதே குற்றச்சாட்டைச் சுமத்தப்பட்டு வர்த்தகம் செய்யத் தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

அமெரிக்கப் பங்குச்சந்தை 

சீன அரசு தற்போது தகவல் பாதுகாப்பு குற்றச்சாட்டுக்குக் கீழ் வர்த்தக தடை விதித்துள்ள Didi, Huochebang, Yunmanman, Boss Zhipin ஆகிய 4 நிறுவனங்கள் சமீபத்தில் அமெரிக்கப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டவை.

சீன நிறுவனங்கள்

சீனாவில் ஐபிஓ வெளியிடும் நிறுவனங்கள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் காரணத்தாலும், அமெரிக்காவில் தற்போது சீன நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் குறைந்த காரணத்தால் நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடச் சீன நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகிறது.

புதிய சட்டம் 

இதேபோல் சீன அரசு ஜூன் மாதம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட Data Security Law மூலம், சீனாவில் சேமிக்கப்பட்ட டேட்டாவை பிற நாட்டிற்குப் பகிரப்பட வேண்டும் என்றால் law enforcement agencies உட்பட பல அமைப்பிடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டும். 

இப்புதிய சட்டம் செப்டம்பர் 1ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அமலாக்கம் செய்யப்படுகிறது. 

அதீத அபராதம் 

இந்த விதியை பூர்த்தி செய்யாத நிறுவனங்கள் மீது 20 லட்சம் யுவான் முதல் 1 கோடி யுவான் அதாவது 3,10,000 டாலர் முதல் 15,00,000 டாலர் வரையில் அபராதம் விதிக்கப்பட உள்ளதாகச் சீன அரசு தெரிவித்துள்ளது. மேலும் நிறுவனங்கள் வர்த்தகம் செய்ய முடியாத வகையில் தடை செய்யவும் வாய்ப்பு உள்ளதாகச் சீன அரசு தெரிவித்துள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக