
இந்தியாவின் மிகவும் பிரபலமான தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, பதிவிறக்கும் வேகத்தின் அடிப்படையில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளதாக, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) அறிவித்துள்ளது. மறுபுறம், பதிவேற்றும் வேகத்தில் Vodafone-Idea (Vi) முன்னிலை வகிக்கிறது. பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றும் வேகத்தைப் பொறுத்தவரை, மற்ற டெலிகாம் நிறுவனத்தின் செயல்திறன் ஜியோ மற்றும் Vi ஆகிய நிறுவனங்களை விட குறைவாக உள்ளது
ஜியோ பதிவிறக்கும் வேகம் 21.9 Mbps
சமீபத்திய TRAI அறிக்கையின்படி, ஜியோவின் சராசரி பதிவிறக்க வேகம் 21.9 Mbps ஆகும். அதே நேரத்தில், வோடபோன்-ஐடியாவின் பதிவிறக்க வேகம் 6.5 Mbps. ஏர்டெல் பயனர்கள் வெறும் 5 Mbps பதிவிறக்க வேகத்தையே பெற்றனர். பதிவேற்றும் வேகத்தைப் பற்றி பேசுகையில், வோடபோன்-ஐடியா பயனர்கள் 6.2 Mbps வேகத்தைப் பெறுகிறார்கள். பதிவேற்றும் வேகத்தில் ஜியோவை (Jio) விட ஏர்டெல் சிறந்ததாக உள்ளது, இது இரண்டாவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில், பதிவேற்றும் வேகத்தில் ஜியோ மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் தொலைத் தொடர்பு நிறுவனங்கள்
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) இந்தியாவில் அதிக சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் மில்லியன் கணக்கான மக்கள் முகேஷ் அம்பானியின் தொலைத் தொடர்பு நிறுவனத்தில் சேர்கிறார்கள். ஏர்டெல் சந்தாதாரர்களைப் பொறுத்தவரை இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு வலையமைப்பு ஆகும். வோடபோன்-ஐடியாவின் நிலை படிப்படியாக மேம்பட்டு வருகிறது, இது இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத் தொடர்பு வலையமைப்பாகும்.
அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) நிலை அவ்வளவு சிறப்பானதாக இல்லை. தனியார் துறையுடன் ஒப்பிடும்போது இது மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது. இந்த நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் கோடி பயனர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகின்றன. இதில் பயனர்கள் தரவு மற்றும் வரம்பற்ற அழைப்பு உள்ளிட்ட பல வசதிகளைப் பெறுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக